யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ தகவலில்படி, கடந்த 2020-21 கல்வியாண்டில் 37,589 அரசு பள்ளிகள் இருந்ததாக தெரிகிறது. அது நான்கு ஆண்டுகள் தொடர்ந்து உயர்ந்து 2023-24 கல்வியாண்டில் 37,672 அரசு பள்ளி இருந்தது. ஆனால் 2024-25 கல்வியாண்டில் 37,626 அரசு இயங்கி வருகின்றன.
பரவிய செய்தி
திமுக ஆட்சியில் தான் மூடப்பட்டது.. புள்ளி விவரத்துடன் சொன்ன DR.M .ரஜினி..

விரிவான விளக்கம்
Tn News24 Digital ஊடகத்தில் தமிழ்நாடு பாஜக கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் DR.M. ரஜினி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் 14,000 பள்ளிகள் மூடப்பட்டதாக தெரிவித்தார்.
உண்மை என்ன?
தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடப்பட்ட data கிடைக்குமா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ தரவுகள் பார்க்கமுடிந்தது.
அதில் கடந்த 2020-21 கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 37,589 அரசு பள்ளிகள் இருந்ததாக தெரிகிறது. அதே போல் 2021-22 கல்வியாண்டில் 37,636 பள்ளிகளாக உயர்ந்ததை பார்க்கமுடிந்தது.. அது நான்கு ஆண்டுகள் தொடர்ந்து உயர்ந்து 2023-24 கல்வியாண்டில் 37,672 அரசு பள்ளிகள் இருந்ததை பார்க்கமுடிந்தது. ஆனால் 2024-25 கல்வியாண்டில் 37,626 அரசு இயங்கி வருகின்றன என்று அதில் இருந்த தரவுகள் மூலம் உறுதிப்படுத்த முடிந்தது.

இதை வைத்து பார்க்கும் போது, கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் முதல் நான்காண்டுகளில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை கூடியுள்ளது. ஆனால் கடைசி ஆண்டில் 46 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்யமுடிந்தது. உண்மை நிலை இவ்வாறு இருக்கையில், தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் 14,000 பள்ளிகள் மூடப்பட்டதாக தவறான தகவலை பாஜகவைச் சேர்ந்த DR.M. ரஜினி பரப்பிவருகிறார்.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் 46 பள்ளிகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. இதை மறைத்து கடந்த ஐந்தாண்டுகளில் 14,000 பள்ளிகள் மூடப்பட்டதாக பொய்யான தகவலை பாஜகவைச் சேர்ந்த DR.M. ரஜினி பரப்பிவருகிறார்.