YouTurn

இத்தாலியில் பிரதமர் மோடிக்கு ராஜவரவேற்பு என பழைய வீடியோவைப் பரப்பும் பாஜகவினர்!

இத்தாலியில் பிரதமர் மோடிக்கு ராஜவரவேற்பு என பழைய வீடியோவைப் பரப்பும் பாஜகவினர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நேற்று பப்புவின் பாட்டி நாடான இத்தாலியில் மோடிஜி எப்படி வரவேற்கப்பட்டார் என்பதை பாருங்கள். சைக்கோபான்ட்கள் இதை பார்க்க வேண்டாம், ஏனென்றால் உங்களால் இதை ஜீரணிக்க முடியாது. 



X Link | Archive Link

விரிவான விளக்கம்

பிரதமர் நரேந்திரமோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றவுடன் ஜூன் 14 அன்று தனது முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி சென்றார். இத்தாலியின் ஃபசானோ நகரில் நடைபெற்ற ஜி7 அமைப்பின் 50-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி அரசு சார்பில் இந்தியாவிற்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக அங்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பைப் பாருங்கள் என்று கூறி 2:14 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்றை பாஜகவினர் சமூகஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகினறனர்.

பரவி வரும் வீடியோவில், காரில் இருந்து இறங்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்துள்ள அரங்கம் ஒன்றில் பிரதமர் மோடி நுழைவதையும், உடனே அங்குள்ள மக்கள் ஆரவாரமாக மோடி மோடி என்று கூச்சலிட்டு வரவேற்பதையும் காண முடிகிறது.




உண்மை என்ன?

பிரதமர் மோடியின் இத்தாலிப் பயணம் என்று கூறி பரவி வரும் வீடியோவை ஆய்வு செய்து பார்த்ததில், வீடியோவின் 45 வது வினாடியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கொடிகள் திரையில் காட்டப்படுவதைக் காண முடிகிறது.



மேலும் பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களையும் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்தோம். பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் "ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்தியாவின் இந்த வளர்ச்சிக் கதையைக் கேட்டதும் உங்கள் நெஞ்சு பெருமிதம் கொள்ளும்!" என்று குறிப்பிட்டு 2023 மே 23 அன்று வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவின் கீபிரேம்கள் பரவி வரும் வீடியோ காட்சிகளோடு பொருந்தின.



தனது ஆஸ்திரேலிய பயணம் குறித்து மோடி பதிவிட்டிருந்த மற்றொரு வீடியோவையும் ஆய்வு செய்ததில், இரண்டிலும் மேடை இடம்பெற்றுள்ள காட்சியும், பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உடன் நடந்து வரும் காட்சிகளும் கச்சிதமாகப் பொருந்தின.



இதன் மூலம் பரவி வரும் வீடியோ பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றபோது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

மேலும் படிக்க: பிரதமர் மோடியின் பல்லடம் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்டதாகப் பரவும் பழைய வீடியோக்கள் !

முடிவு:

நம் தேடலில், இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பைப் பாருங்கள் என்று கூறி பாஜகவினர் பரப்பும் வீடியோ, மோடி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க