யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
தமிழ்நாட்டில் மது அருந்தும் வயது 50-ஆக 40-ஆக இருந்தது ஆனால் தற்போது நடக்கும் திராவிட கள்ளசாராய மாடல் ஆட்சியில் மது குடிக்கும் வயது 20-ஆக 15-ஆக 10-ஆக 8-ஆக வந்துவிட்டது. நாடு நாசமாய் போய்விட்டது...!!

X Link | Archive Link

X Link | Archive Link
விரிவான விளக்கம்
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 57ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கோர சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 8 வயது குழந்தை கூட தற்போது மது அருந்துகிறது என்று கூறி 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை பாஜகவினர் சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர். அதில் சிறுவர்கள் பலர் மது அருந்துவது போன்றே கையில் உள்ள பானத்தை அருந்துவதைக் காணமுடிகிறது.
பரவி வரும் அப்பதிவுகளில், "தமிழ்நாட்டில் மது அருந்தும் வயது 50-ஆக, 40-ஆக இருந்தது. ஆனால் தற்போது நடக்கும் திராவிட கள்ளசாராய மாடல் ஆட்சியில் மது குடிக்கும் வயது 20-ஆக, 15-ஆக, 10-ஆக, 8-ஆக வந்துவிட்டது நாடு நாசமாய் போய்விட்டது" என்று குறிப்பிட்டுள்ளதையும் காணமுடிகிறது.

உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறியமுடிந்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் 28 அன்றிலிருந்தே பரவி வரும் இந்த வீடியோ "சரவணன் விஜயபாரதமக்கள் கட்சி வேலூர்" என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் "சிறுவர்களுக்கு மது அருந்த வைக்கும் அதிர்ச்சி காட்சி எங்கு நடந்தது என்று கண்டுபிடியுங்கள். ஊற்றி கொடுக்கும் நபர் சிறுவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
எனவே 2019ஆம் ஆண்டிலிருந்து பரவி வரும் பழைய வீடியோவை, தற்போது எடுக்கப்பட்ட வீடியோ என்றுகூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் குழந்தைகள் மது அருந்துவதாகப் பரவும் 2018ல் இருந்து பரவிய வடஇந்திய வீடியோ!
இதற்கு முன்பும் சிறுவர்கள் தமிழ்நாட்டில் மது அருந்துகின்றனர் என்று கூறி பலர் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பினர். அப்போதே இதுகுறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் பல கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் சிறுவன் மது அருந்துவதாகப் பரப்பப்படும் சித்தரிக்கப்பட்ட போலி வீடியோ !
முடிவு:
நம் தேடலில், 'தமிழ்நாட்டில் 8 வயது குழந்தைக் கூட தற்போது மது அருந்துவதைப் பாருங்கள்' என்று கூறி பரவும் வீடியோ, கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வரும் பழைய வீடியோ என்பதை அறியமுடிகிறது.

#தமிழ்நாட்டில் #மது அருந்தும் வயது 50-ஆக 40-ஆக இருந்தது ஆனால் தற்போது நடக்கும் #திராவிட #கள்ளசாராய #மாடல் #ஆட்சியில் மது குடிக்கும் #வயது_20_ஆக_15_ஆக_10_ஆக 8-ஆக வந்துவிட்டது #நாடு #நாசமாய் #போய்விட்டது...!!#DMK #Stalin❤️ #dravid #model pic.twitter.com/Ml8pv5XCP1
— உதயநத்தம் வெத.ராஜமோகன் விவசாயி (@rajMoha13376888) June 22, 2024