YouTurn

ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகாரம் பற்றி பாஜகவினரால் பரப்பப்படும் பழைய News Card!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகாரம் பற்றி பாஜகவினரால் பரப்பப்படும் பழைய News Card!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது 30/06/2023 அன்று வெளியிடப்பட்ட பழைய News Card ஆகும்.

பரவிய செய்தி

இனி தாண்டா இருக்குது.. ஆட்டமே!!


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் சட்டமன்றத்தில் இரண்டு முறை நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதை கண்டித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல்வருக்கு போட்டியாக  ஊட்டியில் துணைவேந்தர்களின் ஆலோசனைக் கூட்டத்தை ஆளுநர் ஆர்.என். ரவி கூட்ட இருப்பதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. 


இவ்வாறாக தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்குகள் தீவிரமடைந்துள்ள இந்த சூழலில், 'செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் எனக்கு இருக்கிறது'  என்று ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதாக குறிப்பிடும் ’புதிய தலைமுறை’ செய்தி ஊடகத்தின் News Card ஒன்று பாஜகவினரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.


உண்மை என்ன?


பரப்பப்படும் News Card-ல் இது 30/06/2023 அன்று வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து பொருத்தமான keywords கொண்டு தேடியதில், ‘புதிய தலைமுறை’ செய்தித்தளத்திலும் இந்த News Card-ஐ காணமுடிந்தது. மேலும், அதே ’புதிய தலைமுறை’ செய்தித்தளத்தில் இது குறித்த ஒரு செய்திக் கட்டுரையைக் காணமுடிந்தது. 


image.png

அதன்படி, செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்தபோது, அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியதாக வெளியான செய்தி உண்மைதான் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

image.png


ஆனால் அதே நேரத்தில், இவ்வாறு பதவி நீக்கம் செய்து அறிவித்த சில மணி நேரங்களிலேயே, ’அட்டர்னி ஜெனரலிடம் இது குறித்து கருத்துக் கேட்குமாறு ஒன்றிய உள்துறை அமைச்சர் தனக்கு அறிவுரை வழங்கியதாகவும், அதனால் மறு உத்தரவு வரும் வரை செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ததை நிறுத்தி வைப்பதாகவும்’ தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு ஆர்.என்.ரவி கடிதம் எழுதியது பற்றியும் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனையெல்லாம் மறைத்துவிட்டு, 2023ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை தற்போது நடந்ததாக பாஜகவினர் தவறாக பரப்புகின்றனர்.  


முடிவு:


பரப்பப்படும் News Card 30/06/2023 அன்று வெளியிடப்பட்ட பழைய News Card ஆகும். மேலும், செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து அறிவித்த சில மணி நேரங்களிலேயே அதனை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ரவி கூறியது குறிப்பிடத்தக்கது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.