YouTurn

ஹெச்.ராஜாவை திருச்சி மனநல காப்பக வாகனத்தில் ஏற்றியதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

ஹெச்.ராஜாவை திருச்சி மனநல காப்பக வாகனத்தில் ஏற்றியதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மனநல காப்பகம், திருச்சி

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

பாஜக கட்சியின் மூத்த தலைவரான ஹெச்.ராஜா திருச்சியில் மனநல காப்பக வாகனத்தில் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றை திமுகவினர் சிலர் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர். அந்தப் புகைப்படத்தில் காவல்துறையினர் சிலர் அவரை சுற்றி பரபரப்பாக நிற்பதையும் காண முடிந்தது.

உண்மை என்ன ?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தப் புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.

இது குறித்து ஹெச்.ராஜாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடியதில், கடந்த செப்டம்பர் 11 அன்று "இன்று திருச்சியில் கைது செய்யப்பட்டபோது" என்ற தலைப்புடன் சமூக ஊடகங்களில் பரவி வரும் அதே புகைப்படத்தை அவர் பதிவு செய்து இருக்கிறார். ஆனால் அதில் திருச்சி மனநல காப்பகம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.



Archive Link:

இதன்மூலம் ஹெச்.ராஜாவின் உண்மையான புகைப்படத்தை சிலர் எடிட் செய்து தவறாக பரப்பியுள்ளனர் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.



மேலும் படிக்க: இந்துக்கள் இந்தியை எதிர்க்கமாட்டார்கள் என எச்.ராஜா கூறியதாக வதந்தி !

இதற்கு முன்பும் ஹெச்.ராஜா குறித்து பரப்பப்பட்ட செய்திகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: மு.க.ஸ்டாலின் புகழ்ச்சி, மோடி, அமித்ஷா மதவெறியர்கள் என்று எச்.ராஜா கூறியதாகப் பரவும் வதந்திகள் !

மேலும் படிக்க: அண்ணாமலைக்கு கூட்டணியை முறிக்க யார் அதிகாரம் தந்தது என ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

முடிவு:

நம் தேடலில், ஹெச்.ராஜாவை திருச்சி மனநல காப்பக வாகனத்தில் ஏற்றியதாகப் பரவி வரும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க