YouTurn

துப்பாக்கியில் தோட்டா நிரப்ப தெரியாமல் அண்ணாமலை முழித்ததாக தவறாகப் பரவும் உபி வீடியோ !

துப்பாக்கியில் தோட்டா நிரப்ப தெரியாமல் அண்ணாமலை முழித்ததாக தவறாகப் பரவும் உபி வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அண்ணாமலை தோட்டாக்கள் நிரப்ப தெரியாமல் முழிப்பு சக‌ போலீஸ் சிரிப்பு



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

மிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வுப்பெற்று அரசியலுக்கு வந்தவர். அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக இருந்த போது துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்ப தெரியாமல் முழித்ததாகவும், அதை கண்டு சக போலீஸ் அதிகாரிகள் சிரித்ததாகவும் 44 நொடிகள் கொண்ட வீடியோவை திமுகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.





வைரல் செய்யப்படும் behindwoods air சேனலின் வீடியோவில், " திடீரென காவல் நிலையத்தில் ஆய்வில் ஈடுபட்ட உயர் அதிகாரி காவல் ஆய்வாளரிடம் துப்பாக்கியை எப்படி கையாள்வீர்கள் எனச் செய்து காண்பிக்க சொன்ன போது அவர் துப்பாக்கிக் குண்டை எங்கே செலுத்துவது எனத் தெரியாமல் பழைய காலத்தில் பீரங்கியின் முன்பகுதியில் செலுத்துவது போல குண்டை முன்பக்கம் போட்ட நிகழ்வு வலைதளத்தில் வைரலாகி வருகிறது " என இடம்பெற்று இருக்கிறது.

உண்மை என்ன ? 

வைரல் வீடியோவில் காவல் ஆய்வாளரிடம் துப்பாக்கியை எப்படி கையாள்வீர்கள் எனக் கேட்டதாக இடம்பெற்று இருக்கிறது. 2019ல் அண்ணாமலை விருப்ப ஓய்வு பெறும் போது பெங்களூர் தெற்கு பகுதியின் துணை ஆணையராக(டி.சி) பணியாற்றிக் கொண்டிருந்தார்.



வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து 2022 டிசம்பர் 28ம் தேதி குமுதம் முகநூல் பக்கத்தில், "  உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலிலாபாத் பகுதியிலிருக்கும் காவல் நிலையத்தில் அம்மாநில ஐ.ஜி பரத்வாஜ் மேற்கொண்ட ஆய்வின் போது, துப்பாக்கியில் தோட்டாக்களைப் பொருத்த தெரியாமல் திணறிய காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார் " எனப் பதிவிடப்பட்டு உள்ளது.



மேற்கொண்டு தேடுகையில், 2022 டிசம்பர் 28ம் தேதி NDTV உள்ளிட்ட செய்திகளில், உபி மாநிலத்தில் காவல் துறையினர் துப்பாக்கியை கையாள்வது குறித்த வீடியோ வைரலாகி வருவதாக வெளியாகி இருக்கிறது.



Twitter link | Archive link 

இந்த வீடியோவை அம்மாநில எதிர்க்கட்சியான சமாஜ்வாதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, யோகி ஆதித்யநாத் அரசை விமர்சித்து இருந்தது.

மேலும் படிக்க : மோடி இருக்கிறார் சுட்டுத் தள்ளுங்கள்: எடிட் செய்து பரப்பப்படும் அண்ணாமலை பேசிய வீடியோ !

மேலும் படிக்க : அண்ணாமலையை தன்பால் ஈர்ப்பாளராக சித்தரித்து விகடன் பெயரில் பரப்பப்படும் போலிச் செய்தி !

முடிவு : 

நம் தேடலில், பாஜக தலைவர் அண்ணாமலை துப்பாக்கியில் தோட்டாவை நிரப்ப தெரியாமல் முழித்ததாகப் பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோவில் இருப்பது அண்ணாமலை அல்ல. அந்த வீடியோ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க