YouTurn

கேரளாவில் தேசியக் கொடி ஏற்ற பறவை உதவியதா? உண்மை என்ன?

கேரளாவில் தேசியக் கொடி ஏற்ற பறவை உதவியதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கொடி ஏற்றத்திற்கு பறவை உதவவில்லை. அது தூரத்திலுள்ள மரத்தின் மீது தான் அமர்ந்து சென்றது.

பரவிய செய்தி

கேரளாவில் தேசியக் கொடி ஏற்றும் பொழுது சிக்கிக் கொண்டது திடீரென வந்த பறவை அதை பறக்க விடுகிறது

X link

விரிவான விளக்கம்

கடந்த 15ம் தேதி 78வது சுதந்திர நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சுதந்திர நாளன்று கேரளாவில் ஒரு இடத்தில் தேசியக்கொடி ஏற்றும்போது கம்பத்தில் சிக்கிக் கொண்ட கொடியை, எங்கிருந்தோ வந்த பறவை ஒன்று உதவி செய்ததாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று பரப்பப்படுகிறது. 

இதனை ’நியூஸ் தமிழ் 24x7’ ஊடகமும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் செய்தியாக வெளியிட்டது.

X link

உண்மை என்ன?

பரவக்கூடிய வீடியோ குறித்துத் தேடியதில், கொடியேற்றும் நிகழ்வின்போது வேறொரு கோணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ‘@ChekrishnaCk’ என்ற எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. 

அதில், கொடிக் கம்பத்திற்குப் பின்னால் தூரத்தில் உள்ள மரத்தின் மீது பறவை அமர்ந்துவிட்டுப் பறந்து செல்வதைக் காணமுடிகிறது. பறவை மரத்தின் மீது அமரும் தருணம், கொடி ஏற்றப்படும் நேரம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்ட கோணம் ( Camera Angle ) ஆகியவை தற்செயலாக ஒரே நேர்கோட்டில் அமைந்ததினால் இவற்றைத் தொடர்புப்படுத்தி கொடி ஏற்ற பறவை உதவியதாகத் தவறான தகவல் பரப்பப்படுகிறது.

தேசியக்கொடியைத் தொடர்புப்படுத்தி இதற்கு முன்னர் பரப்பப்பட்ட பல போலி செய்திகள் பற்றிய உண்மை யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: லுலு மாலில் இந்தியக் கொடியைவிடப் பாகிஸ்தான் கொடி பெரியதாகவும் உயரமாகவும் வைக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி!

மேலும் படிக்க: தேசியக் கொடி போன்று “மூவர்ணத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்” எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

முடிவு: 

கேரளாவில் தேசியக்கொடி ஏற்ற பறவை உதவியதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல.

அந்த நிகழ்வின்போது வேறொரு கோணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில், தூரத்தில் உள்ள மரத்தின்மீது பறவை அமர்ந்துவிட்டுப் பறந்து செல்வதைக் காணமுடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.