YouTurn

“பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்றாரா பாக்யராஜ்?

“பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்”  என்றாரா பாக்யராஜ்?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் “பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்று கூறியதாகக் கூறி தந்தி டிவியின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

பரவிய செய்தி

"பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்". பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டு இருக்கிறது. விமர்சனங்களுக்கெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதில்லை - இயக்குநர் பாக்யராஜ் பேச்சு


X Link | Archive Link


விரிவான விளக்கம்

நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் “பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்று கூறியதாகக் கூறி தந்தி டிவியின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. 


பரவி வரும் நியூஸ் கார்டில், “இயக்குநர் பாக்யராஜ் விமர்சனம்; பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்; பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதபட்டு இருக்கிறது; விமர்சனங்களுக்கு எல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதில்லை” என்று அதில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. 




உண்மை என்ன? 


பரவி வரும் செய்தி குறித்து இயக்குநர் பாக்யராஜின் எக்ஸ் பக்கத்தில் தேடிப் பார்த்தோம். அவர் இது குறித்து எந்த கருத்தையும் சமீபத்தில் கூறவில்லை என்பதை அறிய முடிந்தது. 


எனவே தந்திடிவி இந்த செய்தியை வெளியிட்டது உண்மைதானா என்பது குறித்து அறிய தந்திடிவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இது குறித்து தேடினோம். கடந்த 2022 ஆகஸ்ட் 20 அன்று பரவி வரும் இதே நியூஸ் கார்டு பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. 


#JUSTIN | "பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்"

*பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதபட்டு இருக்கிறது

விமர்சனங்களுக்கெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதில்லை - சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ் பேச்சு
#DirectorBhagyaraj | #Modi pic.twitter.com/IHXXpMTwqb

— Thanthi TV (@ThanthiTV) April 20, 2022


இதன் மூலம் கடந்த 2022-ல் வெளியிடப்பட்ட தந்தி டிவியின் நியூஸ் கார்டை, தற்போது வெளியிட்டதாகக் கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருவதை அறிய முடிகிறது. 


மேலும் படிக்க: சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று கூறிய இபிஎஸ் எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!


இதற்கு முன்பும் இதே போன்று பல நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.


மேலும் படிக்க: அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா விலகல் எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!


மேலும் படிக்க: '2026 சட்டமன்ற தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு முடிவுகள்' எனப் பரவும் தவறான நியூஸ்கார்டு!


முடிவு: 


நம் தேடலில், பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று இயக்குநர் பாக்யராஜ் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு, கடந்த 2022-ல் வெளியிடப்பட்ட பழைய நியூஸ்கார்டு என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.