YouTurn

பிபிசி மீதான ஐடி ரெய்டு காரணமாக மோடிக்கு எதிராக லண்டன் பாலத்தில் வைக்கப்பட்ட பேனரா ?

பிபிசி மீதான ஐடி ரெய்டு காரணமாக மோடிக்கு எதிராக லண்டன் பாலத்தில் வைக்கப்பட்ட பேனரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

ஐடி ரெய்டு விட்டா உடனே பயந்துட்டு அம்மாஞ்சியா இருக்க BBC என்ன தயிர் சாத இந்தியா ஊடகம்னன்னு நினைச்சிங்கடா சங்கிகளா... லண்டன் தேம்ஸ் நதிக்கரையில்..

Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

ண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட மோடி குஜாரத் ஆவணப்படத்திற்கு ஆளும் பாஜக அரசு தடை விதித்தது. பிபிசியின் ஆவணப்படம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலங்களில் வருமான வரித்துறையால் 3 நாட்கள் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. பிபிசி மீது நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனைக்கு பல்வேறு கண்டனங்களும் எழுந்தன.

இந்நிலையில், பிபிசி மீது மோடி அரசு வருமான வரித்துறை சோதனை நடத்தியன் விளைவால் லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் " பிரதமர் மோடியை பதவி விலகக் கொல்லி " பேனருடன் போராட்டம் நடைபெற்றதாக 28 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவில், " Resign Modi " என எழுதப்பட்ட பேனர் தொங்கவிடப்பட்டு உள்ளது. லண்டன் பாலத்தில் மோடியை பதவி விலகச் சொல்லி நடத்தியப் போராட்டம் குறித்து தேடுகையில், வைரல் செய்யப்படும் வீடியோ கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி Cloud 7 TV சேனல் எனும் முகநூல் பக்கத்தில் வெளியாகி இருப்பதை பார்க்க முடிந்தது.



2021 ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் மோடியை ராஜினாமா செய்யச்சொல்லி பேனர் தொங்கவிடப்பட்டதாக தி கேரவன் இந்தியா ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.



Twitter link 

பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் மீதான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுப்பது, தலித் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைகள், கோவிட் 19 பாதிப்பை திறன்பட கையாளாமல் விட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு " மோடி ராஜினாமா " செய்யும் நாளே இந்தியாவிற்கு சுதந்திர நாள் என எழுதப்பட்ட பேனரை புலம்பெயர்ந்த இந்தியர்கள் தொங்கவிட்டதாக தெற்காசிய ஒற்றுமை குழு யூடியூப் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டு இருக்கிறது.



மேலும் படிக்க : மோடி ஆவணப்படம் வெளியாவதற்கு முன்பாக பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்ததாகப் பரவும் வதந்தி !

மேலும் படிக்க : லண்டனில் பிபிசிக்கு எதிராக போராடிய சங்கிகளை பொதுமக்கள், காவல்துறை தாக்கும் வீடியோவா ?

இதற்கு முன்பாக, பிபிசி ஆவணப்படம் தொடர்பாக அரசியல் ரீதியாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட பல தவறான தகவல்கள் குறித்தும் கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.

முடிவு : 

நம் தேடலில், பிபிசி மீது ஐடி ரெய்டு நடத்தியதால் லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் உள்ள பாலத்தில் " ராஜினாமா மோடி " என எழுதப்பட்ட பேனர் தொங்கவிடப்பட்டதாக பரவும் வீடியோ சமீபத்தில் நடந்தது அல்ல. வைரல் செய்யப்படும் வீடியோ 2021 இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு லண்டன் பாலத்தில் வைக்கப்பட்ட பேனர் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க