யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சதுர வடிவில் நான்கு ஸ்பூன்களை இணைத்து, ஸ்பூன் கைப்பிடியின் தொடக்கத்தில் நான்கு பேட்டரிகளை வைக்க வேண்டும். பின்பு நடுவில் ஒரு நாணயத்தை வைக்கும் போது, நாணயம் சுழலும் என்று கூறி 43 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து தேடுகையில், இதே மாதரியான பல வீடியோக்கள் யூடியூப் பக்கங்களில் காணப்பட்டன. குறிப்பாக 'The Dad Lab' என்ற யூடியூப் பக்கத்தில், பரவி வரும் இதே மாதிரான ஒரு வீடியோ குறித்து விளக்கப்பட்டிருந்ததோடு, இந்த செயல்முறை போலியானது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
அந்த வீடியோவில், இந்த பரிசோதனை குறித்து படிப்படியாக விளக்கி காண்பிக்கப்பட்டிருந்தது. அதில், "ஆரம்பத்தில் ஸ்பூன்கள் அல்லது ஃபோர்க்குகளால் செய்யப்பட்ட சதுரத்தில், 4 பேட்டரிகளை மட்டும் வைத்து, கேமராவைப் பதிவுசெய்யத் தொடங்க வேண்டும், பின்னர் நாணயத்தை கையால் சுழல செய்யவும். நாணயம் சுழல்வதை நிறுத்தும்போது, அதிலிருந்து ஒரு பேட்டரியை மட்டும் அகற்ற வேண்டும். இப்போது வீடியோவை பதிவு செய்வதை நிறுத்திவிட்டு, ரிவர்ஸ் முறையில் எடிட் செய்யும் போது, இதை உண்மையான செயல்முறை போன்றே, உருவாக்கிக்கொள்ள முடியும்." என்று தெளிவாக செய்து காண்பிக்கப்பட்டிருந்தது.
மேலும் Phil McCordic என்பவரது யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவிலும், பரவி வரும் வீடியோவில் உள்ளவாறு சதுர வடிவிலோ அல்லது முக்கோண வடிவிலோ ஸ்பூன்களை இணைத்து, பேட்டரிகளுக்கு நடுவில் நாணயத்தை வைக்கும் போது, நாணயம் சுழலாது என்பதை வீடியோவின் 1:01 நிமிடத்தில் தெளிவாக விளக்கியிருந்தனர்.
மேலும் இதே போன்று ரிவர்ஸ் முறையில் எடிட் செய்து, பென்சில்களுக்கு நடுவே நாணயம் சுழல்வது போன்ற வீடியோவையும் உருவாக்கியிருந்தனர். இதன் மூலம் பரவி வரும் வீடியோ போலியானது என்பது உறுதியாகிறது. மேலும், கயிறைக் கட்டி நாணயத்தை சுழலச் செய்து, அதை எடிட் செய்தும் வீடியோவை தயார் செய்ய முடியும்.
மேலும் படிக்க: சில நொடிகள் மூச்சை இழுத்துப் பிடித்திருப்பதன் மூலம் நுரையீரலின் ஆரோக்கியத்தை பரிசோதிக்கலாம் எனப் பரவும் தவறான தகவல்!
இதற்கு முன்பும் இதே போன்று பல செய்திகள் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: பால் குடிப்பதால் எலும்பு சார்ந்த ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படுமா? உண்மை என்ன ?
முடிவு:
நம் தேடலில், ஸ்பூன் மற்றும் பேட்டரிகளை இணைத்தால் நாணயத்தை சுழல வைக்கலாம் எனப் பரவும் வீடியோ சோதனை போலியானது என்பதை அறிய முடிகிறது.
Is this possible? pic.twitter.com/luYGqM3XFp
— Science (@ScienceGuys_) February 1, 2024