YouTurn

மின் கம்பிகளுக்காக பனை மரக் கிளைகளை வெட்டிய திமுக அரசு என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

மின் கம்பிகளுக்காக பனை மரக் கிளைகளை வெட்டிய திமுக அரசு என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மின் கம்பிகள் உரசாமல் இருக்க பனை மரக் கிளைகளை வெட்டியதாகப் பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல. பங்களாதேஷில் நிகழ்ந்த சம்பவம் இது. இதை திமுக ஆட்சியில் நடைபெற்ற சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

இது தான் திராவிட மாடல் ஆட்சி...

ஏன் அந்த கரண்ட் லைன்ன மாற்றி அமைக்கலாமே..

இவர்கள் தான் அறிவு திருவிழா நடத்துறாங்க…

image.png

Instagram Link | Archived Link

விரிவான விளக்கம்

மின் கம்பிகள் உரசாமல் இருக்க பனை மரக் கிளைகளை வெட்டிய திமுக அரசு என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


உண்மை என்ன? 

முதலில் பரவி வரும் வீடியோ கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அப்போது Rohan Khan Raihan என்ற பேஸ்புக் பக்கத்தில் டிசம்பர் 14ஆம் தேதியன்று அந்த வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில்  பேசியுள்ள அந்த நபர், வங்கதேசத்தில் உள்ள Naogaon என்கிற மாவட்டத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுருந்தார்.  மேலும் அதில் அதிகாரிகள் மின் கம்பிகளைக் காக்க பனைமரத்தின் மேற்பகுதியை வெட்டி விடுவதாகவும், அப்படி வெட்டப்பட்ட மரங்கள் மீண்டும் துளிர்ப்பது கடினம் என்பதாகவும் பேசியிருந்தார். 


இதைவைத்து வங்கதேசன், Naogaon, மின்கம்பம் போன்ற  keywords மூலம் கூகுளில் தேடினோம். அப்போது Independent Television என்ற வங்கதேச ஊடகத்தில், ”Palm trees are being pruned under the pretext of power line maintenance; Nesko's role is being questioned” என்ற தலைப்பில் டிசம்பர் 20ஆம் தேதி இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் மின்சார கம்பிகள் அமைப்பதற்காக நவோகன் பைபாஸ் சாலையில் 500க்கும் மேற்பட்ட பனைமரங்கள் வெட்டப்பட்டதாகவும், ஏராளமான பனை மரங்கள் மின்சாரம் தாக்கி கருகியதாகவும் குற்றம்சாட்டி இயற்கை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.


முடிவு: 

எனவே, மின் கம்பிகள் உரசாமல் இருக்க பனை மரக் கிளைகளை வெட்டியதாகப் பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல. பங்களாதேஷில் நிகழ்ந்த சம்பவம் இது. இதை திமுக ஆட்சியில் நடைபெற்ற சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க