YouTurn

இந்திய இரயிலில் எடுக்கப்பட்ட காட்சி எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ !

இந்திய இரயிலில் எடுக்கப்பட்ட காட்சி எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மோடி உருவாக்கிய "புதிய பாரதம்" எப்படி?

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

பெண்கள் வரிசையாக இரயிலின் மேற்கூரையிருந்து மின்கம்பம் வழியாக இறங்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் 'ரயிலின் மேற்கூரைகளில் பயணிப்பதால் பெண்கள் டிக்கெட் எடுக்கவேண்டியதில்லை' என்றும், 'ஆபத்துகளுடன் பயணித்தாலும் பயணம் முடிந்தது' என்றும் ஹிந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.



உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிந்தது.

இந்த வீடியோவில் இருப்பது போன்ற ரயில்கள் குறித்து தேடியதில், இதில் இருப்பது போன்ற ரயிலின் புகைப்படங்கள் india.com என்ற இணைய பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த புகைப்படங்களிலும் வேறொரு பெண் ரயிலின் மேற்கூரை மேல் ஏறுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.



மேலும் அந்த கட்டுரையில், "'ரயிலில் இடம் இல்லாவிட்டாலும், எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும் என்று ஒருவரையொருவர் தள்ளாடித் தள்ளுவதை இதில் பார்த்திருப்பீர்கள். மக்கள் கூரைகளில் ஏறுவது, கதவுகளில் தொங்குவது - இவையெல்லாம் இந்தியாவில் பொதுவாகக் காணப்படும் ஒரு பொதுவான காட்சி' என்று கூறி இருக்கை கிடைக்காததால் ரயிலின் மேற்கூரையில் ஏற முயற்சிக்கும் பெண்ணைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோ வங்கதேசத்தில் இருந்து எடுக்கப்பட்டது, அதில் ஒரு பெண் பல முயற்சிகளுக்குப் பிறகும் கூரையின் மீது ஏற முடியவில்லை, மற்றவர்கள் அவளை மேலே இழுக்க முயன்றனர். அடுத்த நொடி, ரயில்வே போலீஸ் ஒருவர் தனது தடியைப் பிடித்தபடி அங்கு வந்து அவரை தடுக்கிறார்." என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதன் மூலம் பரவிவரும் வீடியோவைப் போன்றே இந்த வீடியோவும் இந்தியாவில் எடுக்கப்பட்டது என்று தவறாக பரப்பப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறது.



தற்போது பரவி வரும் வீடியோவில் இரயிலில் எழுதப்பட்டுள்ளவற்றை மொழிப்பெயர்த்து பார்த்ததில், அதில் 'வங்கதேச ரயில்வே' என்று குறிப்பிடப்பட்டிருந்தன. இதன் மூலம் இவை வங்கதேசத்தை சேர்ந்த இரயில்கள் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.



இதுபோன்ற இரயில்களும், இரயில்களின் மேற்கூரையில் மக்கள் கூட்டம் கூட்டமாக பயணிப்பதும் வங்காளதேச நாட்டில் காணப்படுகின்றன.

முடிவு:

நம் தேடலில், இந்திய இரயிலில் பெண்களின் நிலையைப் பாருங்கள் என்று கூறி பரவி வரும் வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என்பதையும், இது வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க