YouTurn

வடமாநிலத்தில் பெண் ஒருவர் பாஜக ஆதரவாளர்களால் துன்புறுத்தபடுவதாக தவறாகப் பரப்பப்படும் வீடியோ!

வடமாநிலத்தில் பெண் ஒருவர் பாஜக ஆதரவாளர்களால் துன்புறுத்தபடுவதாக தவறாகப் பரப்பப்படும் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஷேக் ஹசீனாவின் பிறந்தநாளை கொண்டாடியதற்காக வங்கதேச நடிகை பொதுமக்களால் துன்புறுத்தப்படும் வீடியோ வெவ்வேறு தவறான கண்ணோட்டங்களுடன் பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி

சங்கிகளின் மாடல்...

image.png

Twitter Link | Archived Link

விரிவான விளக்கம்

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட மேற்கண்ட விடியோவில்  ரிச்சாவில் சவாரி செல்லும் பெண்ணை சிலர் சுற்றி வலைத்து துன்புறுத்துகிறார்கள். அந்த சம்பவம் வடமாநிலத்தில் நடப்பதாகவும், அந்த  பெண்ணை துன்புறுத்துவது பாஜக ஆதரவாளர்கள் என்றும் பரப்பப்படுகிறது.

https://x.com/i/web/status/1841371726594392146

உண்மை என்ன?

ஒரு பெண் ரிச்சா வண்டியில் அமர்ந்து கையில் கேக்கை வைத்திருக்கும்  இந்த விடியோவின் key frameகளைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், அதிலிருக்கும் பெண் வங்கதேசத்தை சேர்ந்த நடிகை மிஷ்தி சுபாஸ் என்று ABP News செய்தி வெளியிட்டிருப்பதை காண்கிறோம்.

மிஷ்தி சுபாஸ், முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் கூடும் சந்தையின் நடுவே கேக் வெட்டியுள்ளார். வங்கதேச மக்கள் ஷேக் ஹசீனாவின் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். காரணம், கடந்த ஜீலை மாதம் வங்கதேசத்தில் தொடங்கிய மாணவர்கள் போராட்டம் 15 ஆண்டுகால ஷேக் ஹசீனாவின் வன்முறை ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறது. இந்த போராட்டத்தின் போது கிட்டத்தட்ட 300 மாணவர்கள் ஷேக் ஹசீனாவின் அரசால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதன் பிறகு முஹமது யூனஸ் தலைமையில் ஒரு இடைக்கால அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அரசாங்கம் மாறினாலும்,  மக்களுக்கு ஷேக் ஹசீனா மீதான கோபம் இன்னும் குறையவில்லை. 

இந்நிலையில்,  ஷேக் ஹசீனாவின் பிறந்தநாளை மக்கள் கூடும் இடத்தில் கொண்டாடுவது மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், மிஷ்தி சுபாஸை துன்புறுத்தி வசைச் சொற்களால் பேசியுள்ளனர். 

இதே வீடியோ வேறு சிலரால், ஹிஜாப் அணியாத காரணத்திற்காக, அமெரிக்க பெண் ஒருவர் வங்கதேசத்தினரால் வசைச் சொற்களால் துன்புறுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் இஸ்லாமிய வெறுப்பு கண்ணோட்டத்துடன் பரப்பப்பட்டது.

ஆனால், உண்மையில் இந்த வீடியோவில் இருப்பது வங்கதேசத்தை சேர்ந்த ஒரு நடிகை என்பதும், அவர்  ஷேக் ஹசீனாவின் பிறந்தநாளை கொண்டாடிய காரணத்திற்காக மக்களால் வசைச் சொற்களால் துன்புறுத்தப்பட்டார் என்பதும் நிரூபணமாகியுள்ளது. இந்த வீடியோ, அவரவர் அரசியல் உள்நோக்கங்களுக்காக திரித்து பரப்பப்படுகிறது.

முடிவு: 

இந்த வீடியோவில் உள்ள சம்பவம்  வடமாநிலத்தில் நடந்ததாக பரப்பப்படும் தகவல் பொய்யானது. மேலும், அந்த பெண் அமெரிக்கப் பெண் என்றும் ஹிஜாப் அணியாததற்காக துன்புறுத்தப்படுகிறார் என்றும் பரப்பப்படும் தகவலும் பொய்யானது. வங்கதேசத்தை சேர்ந்த நடிகை மிஷ்தி சுபாஸ், ஷேக் ஹசீனாவின் பிறந்தநாளை கொண்டாடியதற்காக துன்புறுத்தப்படும் வீடியோ தவறாக பரப்பப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க