யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பள்ளியில் தொழுகை செய்த முஸ்லீம் மாணவிகளை பஜ்ரங் தள் அமைப்பினர் மிரட்டிய வீடியோவை இந்து - முஸ்லிம் பிரிவினையை தூண்டும் வகையில் திரித்து பொய் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
கழிந்த ஆகஸ்ட் மாதம் மூடிய கதவுகளுக்குப் பின் வகுப்புகளுக்குப் பிறகு இந்துப் பெண்களுக்கு நமாஸ் செய்ய கற்றுக்கொடுக்கும் முஸ்லீம் பெண்கள் கண்டு பிடிக்கப்பட்டனர்...

விரிவான விளக்கம்
பள்ளி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் இந்து மாணவிகளுக்கு தொழுகை செய்வது எப்படி என சொல்லித்தந்தது கண்டறியப்பட்டது என வீடியோ ஒன்று வலதுசாரிகளால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
தெலுங்கானாவில் உள்ள ஒரு பள்ளியில் இஸ்லாமிய மதமாற்ற முறைகள், மூடிய கதவுகளுக்குப் பின் வகுப்புகளுக்குப் பிறகு இந்துப் பெண்களுக்கு நமாஸ் செய்ய கற்றுக்கொடுக்கும் முஸ்லீம் பெண்கள் கண்டு பிடிக்கப்பட்டனர். pic.twitter.com/ubDUMWFX7g
*தெலுங்கானாவில் உள்ள ஒரு பள்ளியில் இஸ்லாமிய மதமாற்ற முயற்சிகள்..*
*மூடிய கதவுகளுக்கு பின்,*
*வகுப்புகளுக்கு பிறகு ஹிந்து பெண்களுக்கு நமாஸ் செய்ய கற்றுக்கொடுக்கும் முஸ்லீம் பெண்கள் கண்டு பிடிக்கப்பட்டனர்..*
*#Student_Jihad* pic.twitter.com/h0yXewYNR6
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோவில் 'siasat.com' என்ற வாட்டர் மார்க் இருப்பதை கவனிக்க முடிகிறது. மேலும் அதில் ’Bajrang Dal Members Attack Muslim Girls at telangana school for offering namaz’ என்றும் உள்ளது. இதனை கொண்டு தேடியதில், இந்த வீடியோ குறித்து 'siasatdaily' இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி செய்தி வெளியிடப்பட்டுள்ளதை காண முடிந்தது.
அதில், தெலங்கானா மாநிலம் வனபர்த்தியில் அமைந்துள்ள சாணக்யா என்ற பள்ளியில் அனுமதி பெற்றுத் தனி அறையில் தொழுகை நடத்திய முஸ்லிம் மாணவிகளை பஜ்ரங் தள் அமைப்பினர் பள்ளியில் நுழைந்து மிரட்டினர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கும் மிரட்டல் விடுத்த நபர்கள் மீதும் FIR பதிவு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ’siasat’ இணையதளத்தில் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியான செய்தியிலும் இதே தகவலைக் காண முடிகிறது. அதில் பரவக் கூடிய வீடியோவில் உள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பள்ளியில் அனுமதி பெற்று தொழுகை செய்த மாணவிகளை பஜ்ரங் தள் அமைப்பினர் மிரட்டியுள்ளனர். அங்கு எந்த இந்து மாணவிக்கும் தொழுகை செய்ய கற்றுத்தரப்படவில்லை. இது தொடர்பாக வெளியான செய்தியை இந்துத்துவாவினர் தங்களின் பொய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.
முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்து வதந்தி, போலி செய்திகள் பரப்பப்படுகிறது. அவற்றின் உண்மைத்தன்மை பற்றி யூடர்னில் கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
முடிவு :
நம் தேடலில், இந்துப் பெண்களுக்கு நமாஸ் செய்ய கற்றுக்கொடுக்கும் முஸ்லீம் பெண்கள் எனப் பரவும் வீடியோ தகவல் தவறானது. உண்மையில் இவை பஜ்ரங் தள் ( Bajrang Dal) அமைபினரால் ஏற்பட்ட ஓர் கலவரம் என்பது தெளிவாகிறது.