யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
அயோத்தி இராமர் கோவிலில் பணம் குவிகிறது… திருப்பதி கோவில் போல் அயோத்தி ராமர் கோயில். உருவெடுக்கும் ஜெய் ஸ்ரீ ராம் 
X link

X link
விரிவான விளக்கம்
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வந்த ராமர் கோயிலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22ம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில் அக்கோயிலில் ஒரே நாளில் காணிக்கை பணம் குவிவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

X link
உண்மை என்ன ?
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் எனப் பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். இதே வீடியோவை இம்மாதம் (ஜனவரி) 19ம் தேதி யூடியூப் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ‘சன்வாலியா சேத் கோயில்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சன்வாலியா சேத் கோயில் ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். மேலும் அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22ம் தேதிதான் திறக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2019ம் ஆண்டு இக்கோயில் உண்டியல் திறக்கப்பட்ட போது எடுத்த வேறு ஒரு வீடியோ ‘Rajasthan Patrika’ என்னும் ஊடகத்தில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் மஞ்சள் நிற ஆடை அணிந்து பணத்தை எடுப்பவரை காண முடிகிறது. அதேபோல் 2023ம் ஆண்டும் அக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது தொடர்பான செய்திகளும் இணையத்தில் உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சன்வாலியா சேத் கோயில் உண்டியல் காணிக்கை வீடியோவைத்தான் அயோத்தி ராமர் கோயில் எனத் தவறாக சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்.
மேலும் படிக்க : பூரி ஜெகன்நாதர் யாத்திரை கூட்டத்தின் படத்தை அயோத்தி எனப் பதிவிட்ட பாஜகவின் இராம ஸ்ரீநிவாசன் !
அயோத்தி ராமர் கோயில் தொடர்பாகப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : அண்டார்டிகாவில் ராமர் பிராண பிரதிஷ்டை கொண்டாட்டம் என எடிட் செய்த படத்தை வெளியிட்ட தினமலர் !
முடிவு :
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் எனப் பரவக் கூடிய வீடியோ ராஜஸ்தானில் உள்ள சன்வாலியா சேத் கோயிலில் எடுக்கப்பட்டது. ராமர் கோயில் திறப்பதற்கு முன்பே அவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.
ஆன்மீக வியாபாரக் கடையில் முதல்நாள் வசூல் pic.twitter.com/Giei1lSpO3
— SaveTheNation/தேசம் காப்போம் (@niayayakkural) January 24, 2024