YouTurn

அயோத்தி ராமர் கோவில் எனப் பரவும் தவறான வீடியோக்கள் !

அயோத்தி ராமர் கோவில் எனப் பரவும் தவறான வீடியோக்கள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

500 ஆண்டுகள் போராட்டம், பலர் உயிர் தியாகம் செய்து திறப்பு விழாவிற்கு தயாரானது அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி.

X link 

விரிவான விளக்கம்

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி விஸ்வ இந்து பரிஷத், பாரதிய ஜனதா கட்சி மற்றும் சில இந்து அமைப்புகள் சேர்ந்து ஒன்றரை லட்சம் தொண்டர்களுடன் உத்தரப் பிரதேசத்தில் பேரணி நடத்தியது. பேரணி வன்முறையாக மாறி அந்த கும்பல் பாபர் மசூதியை இடித்தது.

அந்த 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரிய இடமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலம் தொடர்பான வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பிறகு நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு ‘2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம்’ என்று 2019, நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.  

இதன் அடிப்படையில் 2020 பிப்ரவரியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஏற்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரும் ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 



இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் என இரண்டு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன ? 

பரவக் கூடிய ட்ரோன் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், அதே வீடியோ ‘BK CREATION என்னும் யூடியூப் பக்கத்தில் கடந்த ஜூன் 19ம் தேதி பதிவிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. 



அதன் நிலைத்தகவலில் (Description) ‘அக்ஷர்தாம் கோவில்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவில் டெல்லியில் அமைந்துள்ளது. ட்ரோன் உதவியுடன் எடுக்கப்பட்ட  அக்கோயிலின் வேறு வீடியோவையும் பரவக் கூடிய வீடியோவையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் இரண்டும் ஒரே கோவில் என்பதை உறுதி செய்ய முடிகிறது. இது அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் கிடையாது.



இதேபோன்று வண்ண மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வேறொரு கோவில் போன்ற கட்டிடத்தையும் ராமர் கோவில் எனப் பரப்புகின்றனர். 

அந்த வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு தேடியதில், அவ்விடத்தில் எடுக்கப்பட்ட வேறு சில வீடியோ மற்றும் புகைப்படங்களைக் கடந்த அக்டோபர் 17ம் தேதி தபன் மிஸ்திரி (Tapan Mistry) என்னும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ‘துர்கா பூஜை 2023, சந்தோஷ் மித்ரா சதுக்கம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ளது.



கொல்கத்தாவில் நடைபெற்ற துர்கா பூஜை விழாவில் அமைக்கப்பட்டிருந்த ராமர் கோவில் மாதிரி குறித்து, ‘இந்துஸ்தான் டைம்ஸ்’, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த ராமர் கோவில் மாதிரியை உண்மையான கோவில் எனத் தவறாக சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர். 

முடிவு : 

நம் தேடலில், அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோவில் எனப் பரவும் இரண்டு வீடியோக்கள் குறித்த தகவல் உண்மை அல்ல. அதில் ஒன்று டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவில்.  மற்றொன்று கொல்கத்தாவில் துர்கா பூஜையின் போது அமைக்கப்பட்ட ராமர் கோவில் மாதிரி என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க