YouTurn

ராமர் கோயில் திறப்பிற்கு முன் உ.பி ரயில் நிலையத்தில் தீ விபத்து எனப் பரவும் பழைய மேற்கு வங்கம் வீடியோ !

ராமர் கோயில் திறப்பிற்கு முன் உ.பி ரயில் நிலையத்தில் தீ விபத்து எனப் பரவும் பழைய மேற்கு வங்கம் வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ராமர் கோயில் திறப்பதற்கு முன்பே உ.பி. இரயில் நிலையம் எரியுதாம். அவ்வளவு ராசிகார பைய ராமன்.. எனக்கு என்னமே இது சங்கிகள் வேலையா தான் இருக்கும்னு தோனுது. இத வச்சி கலவரம் பன்ன.

X link 

விரிவான விளக்கம்

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி விஸ்வ இந்து பரிஷத், பாரதிய ஜனதா கட்சி மற்றும் சில இந்து அமைப்புகள் சேர்ந்து ஒன்றரை லட்சம் தொண்டர்களுடன் உத்தரப் பிரதேசத்தில் பேரணி நடத்தியது. பேரணி வன்முறையாக மாறி அந்த கும்பல் பாபர் மசூதியை இடித்தது. 

அவ்விடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஏற்படுத்த ஒன்றிய அமைச்சரவை 2020 பிப்ரவரியில் ஒப்புதல் அளித்தது. 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரும் ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

X link | Archive link 

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ரயில் நிலையம் ஒன்று தீப்பிடித்து எரிவதாக திமுக மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றினை பரப்பி வருகின்றனர். 



உண்மை என்ன ? 

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடியதில், அது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இரயில் நிலையம் ஒன்றில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீ விபத்து என்பதை அறிய முடிந்தது. 

இச்சம்பவம் தொடர்பாக ‘News Drum’ என்னும் தளத்தில் 2023, ஏப்ரல் 7ம் தேதி வெளியான செய்தியில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சந்தோஷ்பூர் என்னும் இரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் 20க்கும் மேற்பட்ட கடைகள் சேதமாகின. மேலும் அப்பகுதியில் இரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அனைத்தும் சரி செய்யப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியதாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 



ஏப்ரல் 6ம் தேதி மாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கிழக்கு ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியது ‘டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்’ செய்தியாக வெளியாகியுள்ளது. அந்த செய்தியில் தீ விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவும் இடம்பெற்றுள்ளது. 



அவ்விடத்தில் எடுக்கப்பட்ட வேறொரு வீடியோவை ‘Piyali Mitra’ என்ற பத்திரிகையாளரும் X (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 



கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தை உத்தரப் பிரதேசம் எனத் தவறாக பரப்புகின்றனர்.

முடிவு : 

நம் தேடலில், மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீ விபத்தை உத்தரப் பிரதேசம் என்றும், ராமர் கோயில் திறப்புடனும் ஒப்பிட்டு தவறாக பரப்பப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க