YouTurn

அயோத்தியில் இயங்குவதற்கு தயார்நிலையில் எலக்ட்ரிக் பஸ்கள் எனப் பரவும் டெல்லி புகைப்படம்!

அயோத்தியில் இயங்குவதற்கு தயார்நிலையில் எலக்ட்ரிக் பஸ்கள் எனப் பரவும் டெல்லி புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

பரவிய செய்தி

அயோத்தியில் இயக்குவதற்கு எலக்ட்ரிக் பஸ்கள் தயார் நிலையில்.

விரிவான விளக்கம்

உத்தரப் பிரதேசத்தில் 1992ம் டிசம்பர் 6ம் தேதி விஸ்வ இந்து பரிஷத், பாரதிய ஜனதா கட்சி மற்றும் சில இந்து அமைப்புகள் சேர்ந்து நடத்திய பேரணி வன்முறையாக மாறி அக்கும்பல் பாபர் மசூதியை இடித்தது.

இது தொடர்பான நீண்ட விசாரணைக்குப் பிறகு நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அவ்விடத்தில் ராமர் கோயில் கட்டலாமென 2019, நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.

இதன் அடிப்படையில் 2020 பிப்ரவரியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஏற்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரும் ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.





இந்நிலையில் அயோத்தியில் இயக்குவதற்காக எலக்ட்ரிக் பஸ்கள் தயார் நிலையில் இருப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.


Facebook link


உண்மை என்ன?

பரவக் கூடிய புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் ஆய்வு செய்ததில் அது டெல்லியில் கொண்டுவரப்பட்ட எலக்ட்ரிக் பஸ்கள் என்பதை அறிய முடிந்தது.

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கத்தில் டெல்லி அரசு சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாகக் கடந்த 2022, மே மாதம் 150 எலக்ட்ரிக் பஸ்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக 'நியூ இந்தியன் எகஸ்பிரஸ்’ தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.



150 AC எலக்ட்ரிக் பஸ்கள் டெல்லியில் கொண்டுவரப்பட்டது தொடர்பாக டெல்லி முதல்வரும் அவரது X (எக்ஸ்) பக்கத்தில் 2022ல் சில படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் நீல நிற எலக்ட்ரிக் பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படமும் உள்ளது.



அப்பேருந்தின் கண்ணாடியில் 'D' என்கிற லோகோ உள்ளது. அதற்குக் கீழே ‘SWITCH DELHI’ என்று எழுதப்பட்டுள்ளது. இதே லோகோவினை பரவக் கூடிய படத்திலும் காண முடிகிறது. இப்பேருந்து படங்கள் டெல்லி அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் உள்ளது.



மேலும் அயோத்தியில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படுவது தொடர்பாக 2023 மார்ச் மாதம் ‘ANI’ செய்தி வெளியிட்டுள்ளது. அப்பேருந்துகள் காவி நிறத்தில் உள்ளது. தற்போது ராமர் கோயில் திறக்கப்படவுள்ள நிலையில் அப்பகுதியில் கூடுதல் பேருந்து இயக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.



ஆனால், பரவக் கூடிய நீல நிற எலக்ட்ரிக் பேருந்து டெல்லியில் இயக்கப்படுவதாகும்.

முடிவு: 

நம் தேடலில், அயோத்தியில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படவுள்ளதாகப் பரவும் படத்தில் உள்ளது டெல்லியில் இயங்கும் எலக்ட்ரிக் பஸ் என்பதை அறிய முடிகிறது.

அயோத்தியில் இதற்கு முன்பிருந்தே எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படுகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க