யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
உத்தர பிரதேசத்தின் அயோத்யாவில் உபயோகபடுத்திய வாட்டர் பாட்டிலை திரும்ப அளித்தால் 5₹ அளிக்கப்படும். தூய்மை இந்தியா!

விரிவான விளக்கம்
நாள்தோறும் டன் கணக்கில் சேருகின்ற பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக எப்படிச் சேகரிப்பது, எப்படி மறுசுழற்சி செய்வது என பல்வேறு யோசனைகளும் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

Instagram link
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உபயோகப்படுத்தப்பட்ட வாட்டர் பாட்டிலை தூக்கி எறியாமல் திருப்பி அளித்தால் ரூ.5 அளிப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பாஜக-வினரல் பரப்பப்படுகிறது. அப்பதிவுகளில் ஒன்றிய அரசின் ’தூய்மை இந்தியா’ திட்டத்தின் பெயரையும் குறிப்பிட்டு பரப்புகின்றனர்.
உண்மை என்ன?
பரவக் கூடிய புகைப்படத்தில் உள்ள வாட்டர் பாட்டிலில் இருக்கக் கூடிய இந்தி வார்த்தைகளைக் கூகுள் ட்ரான்ஸ்லேட் உதவியுடன் மொழிபெயர்த்துப் படித்தோம். அதில், ரூ.5 என இருப்பதற்குக் கீழே 'பணத்தைத் திரும்பப் பெறுங்கள்' என்றுள்ளது.
அதேபோல் QR code-க்கு கீழே 'ரீஃபண்ட் சென்டருக்கு காலியான பாட்டில்கள் / பாக்கெட்டுகளை திருப்பிக் கொடுத்து ₹5 திரும்பப் பெறுங்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அந்த ஸ்டிக்கரின் வலது கீழ் பக்கம் 'the kabadiwala' என ஆங்கிலத்தில் உள்ளது.
[caption id="attachment_52305" align="aligncenter" width="436"]
கூகுள் ட்ரான்ஸ்லேட்[/caption]
இதனைக் கொண்டு இணையத்தில் தேடியதில் இதே ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட 'Bisleri' பாட்டில் ‘The Kabadiwala’ என்னும் எக்ஸ் பக்கத்தில் கடந்த 10ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில், ‘அயோத்தியில், பணத்தைத் திரும்பப்பெறும் மையத்தில் காலி பாட்டிலைத் திருப்பிக் கொடுத்தால், ₹5 டெபாசிட் திரும்பப் பெறுவீர்கள். அயோத்தியைத் தூய்மையாக வைத்திருக்க The Kabadiwala அயோத்தி மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சி இது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு பதிவுகள் அவர்களது எக்ஸ் பக்கத்தில் காண முடிகிறது.
ஒருவர் வாங்கக் கூடிய தண்ணீர் பாட்டில், சிப்ஸ் பாக்கெட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக ரூ.5 செலுத்தி வாங்க வேண்டும். பெறப்பட்ட இந்த கூடுதல் (டெபாசிட்) தொகைக்காக ஒரு QR code அந்த பாட்டில் அல்லது பாக்கெட்டின் மேல் ஒட்டப்படும். பிறகு காலி பாட்டிலை The Kabadiwala அமைத்துள்ள மையத்தில் திருப்பி கொடுத்து டெபாசிட் பணத்தைத் திரும்பப் பெறலாம்.
Kabadiwala என்னும் அமைப்பு குப்பைகளைச் சேகரிப்பது, மறுசுழற்சி செய்வது என பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. தற்போது அப்பணிகளின் ஒரு கட்டமாக அயோத்தி மாநகராட்சியுடன் இணைந்து டெபாசிட் முறையில் பயன்படுத்தப்பட்ட வாட்டர் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதில் வாடிக்கையாளர் செலுத்திய டெபாசிட் பணம் தான் திருப்பி செலுத்தப்படுகிறது. அயோத்தி அரசோ, Kabadiwala அமைப்போ எந்த பணத்தையும் வழங்கவில்லை. ஆனால், பாட்டிலைத் திருப்பி கொடுத்தாலே 5 ரூபாய் தருவதாகத் தவறான தகவல் பரப்பப்படுகிறது.
மேலும் படிக்க : அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வந்த 12 தங்க வாகனங்கள் எனப் பரவும் தெலங்கானா கோவில் வீடியோ !
மேலும் படிக்க : அயோத்தி ராமர் கோவிலின் ஒரு நாள் உண்டியல் பணம் எனப் பரப்பப்படும் ராஜஸ்தான் கோவில் வீடியோ!
முடிவு :
நம் தேடலில், அயோத்தியில் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலைத் திருப்பி கொடுத்தால் 5 ரூபாய் தருவதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. தண்ணீர் பாட்டிலை வாங்கக் கூடியவர் செலுத்திய டெபாசிட் பணம்தான் திருப்பி கொடுக்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.

Instagram link
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உபயோகப்படுத்தப்பட்ட வாட்டர் பாட்டிலை தூக்கி எறியாமல் திருப்பி அளித்தால் ரூ.5 அளிப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பாஜக-வினரல் பரப்பப்படுகிறது. அப்பதிவுகளில் ஒன்றிய அரசின் ’தூய்மை இந்தியா’ திட்டத்தின் பெயரையும் குறிப்பிட்டு பரப்புகின்றனர்.
உத்தர பிரதேசம் அயோத்தியில் உபயோகபடுத்திய வாட்டர் பாட்டிலை திரும்ப அளித்தால் 5₹ அளிக்கப்படும்!
தூய்மை இந்தியா! pic.twitter.com/hkvK1E3P0n
— Ram Thevar ( ராம் தேவர் ) (@RamThevar9) February 10, 2024
உண்மை என்ன?
பரவக் கூடிய புகைப்படத்தில் உள்ள வாட்டர் பாட்டிலில் இருக்கக் கூடிய இந்தி வார்த்தைகளைக் கூகுள் ட்ரான்ஸ்லேட் உதவியுடன் மொழிபெயர்த்துப் படித்தோம். அதில், ரூ.5 என இருப்பதற்குக் கீழே 'பணத்தைத் திரும்பப் பெறுங்கள்' என்றுள்ளது.
அதேபோல் QR code-க்கு கீழே 'ரீஃபண்ட் சென்டருக்கு காலியான பாட்டில்கள் / பாக்கெட்டுகளை திருப்பிக் கொடுத்து ₹5 திரும்பப் பெறுங்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அந்த ஸ்டிக்கரின் வலது கீழ் பக்கம் 'the kabadiwala' என ஆங்கிலத்தில் உள்ளது.
[caption id="attachment_52305" align="aligncenter" width="436"]
கூகுள் ட்ரான்ஸ்லேட்[/caption]இதனைக் கொண்டு இணையத்தில் தேடியதில் இதே ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட 'Bisleri' பாட்டில் ‘The Kabadiwala’ என்னும் எக்ஸ் பக்கத்தில் கடந்த 10ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில், ‘அயோத்தியில், பணத்தைத் திரும்பப்பெறும் மையத்தில் காலி பாட்டிலைத் திருப்பிக் கொடுத்தால், ₹5 டெபாசிட் திரும்பப் பெறுவீர்கள். அயோத்தியைத் தூய்மையாக வைத்திருக்க The Kabadiwala அயோத்தி மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சி இது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு பதிவுகள் அவர்களது எக்ஸ் பக்கத்தில் காண முடிகிறது.
In Ayodhya, if you return the empty bottle at the refund center you will get ₹5 deposit back.
This is an initiative by @TheKabadiwala along with the Nagar Nigam Ayodhya to keep Ayodhya Clean. They named this drive #RamBhoomiSwachhBhoomi !!@anandmahindra @narendramodi pic.twitter.com/Q3x25qA6b3
— The Kabadiwala (@TheKabadiwala) February 10, 2024