YouTurn

வெறும் உண்மையை கண்டறியும் குழு என்று செய்தி பரப்பும் Asianet News ஊடகம்!

வெறும் உண்மையை கண்டறியும் குழு என்று செய்தி பரப்பும் Asianet News ஊடகம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கம்’ சார்பில் கரூர் சம்பவம் தொடர்பாக உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு, அதற்கான அறிக்கை வெளியிடபட்டது. இதை வெறும் "உண்மை அறியும் குழு அதிகாரிகளால்" நடத்தப்பட்ட சந்திப்பு என்று செய்திகளில் குறிப்பிட்டு ‘தமிழ் Asianet News’ ஊடகம் உட்பட பலரும் தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

விஜய்யை குற்றவாளியாக்க துடிக்கும் உண்மை கண்டறியும் குழு..? TVKவை குறை சொல்ல மாறி மாறி அடித்துக்கொண்ட அதிகாரிகள்

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில், 18 பெண்கள், 10 குழந்தைகள், 13 ஆண்கள் என 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமல்ல நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்திருந்தது.

இந்நிலையில் விஜய்யை குற்றவாளியாக்க துடிக்கும் உண்மை கண்டறியும் குழு என்று  கூறி தமிழ் Asianet News ஊடகம் உட்பட பலரும் செய்தியை பரப்பி வருகின்றனர். 


உண்மை என்ன? 

முதலில் தமிழ் Asianet News ஊடகம் வெளியிட்ட செய்தியில் உள்ள உண்மை கண்டறியும் குழு குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது ”கரூர் கூட்ட நெரிசலுக்கும், உயிரிழப்புக்கும் 'இது' தான் காரணம்! அடித்து சொன்ன உண்மை கண்டறியும் குழு!” என்ற தலைப்பில் அக்டோபர் 16, 2025 அன்று இது குறித்து ETV Bharat ஊடகத்தில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் கரூரில் விஜய் தாமதமாக வந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கத்தின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளதாகவும், பேராசிரியர் சரஸ்வதி, கீதா உள்ளிட்டோர் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அறிக்கை வெளியிட்டு பேசியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


எனவே இது பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கத்தின் உண்மையை கண்டறியும் குழு. இதற்கும் தமிழக அரசும் எந்த தொடர்புமில்லை. 


இது குறித்து மேலும் தேடிய போது, மின்னம்பலம் ஊடகத்தில் ”கரூர் பெருந்துயரம்.. நடிகர் விஜய் தாமதமாக வந்ததுதான் காரணம்… அதிர்ச்சிகளை சொல்லும் உண்மை கண்டறியும் குழு அறிக்கை” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதிலும் கரூர் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் திட்டமிட்டு தாமதமாக வந்ததுதான் காரணம் என்று  பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கத்தின் உண்மை கண்டறியும் குழு குற்றம் சாட்டி உள்ளது என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

எனவே இது ‘பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கம்’ சார்பில் கரூர் சம்பவம் தொடர்பாக உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு, அதற்கான அறிக்கை வெளியிடபட்டது. இதை வெறும் "உண்மை அறியும் குழு அதிகாரிகளால்" நடத்தப்பட்ட சந்திப்பு என்று செய்திகளில் குறிப்பிட்டு ‘தமிழ் Asianet News’ ஊடகம் உட்பட பலரும் தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க