யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
112 அவசர எண் சேவையில் வேலை செய்யும் முன்னாள் இராணுவ வீரர்கள் ஊதிய உயர்வு கேட்டு பீகாரில் நிதீஷ் குமார் அரசாங்கத்திற்கு எதிராக போராடிய போது எடுக்கப்பட்டு வீடியோ இது.
பரவிய செய்தி
பீகாரில் பி.ஜே.பி நிதீஷ் குமார் ஆட்சிக்கு எதிராக ராணுவ வீரர்கள் போராட்டம்.
வாக்கு திருடர்களுக்கு எதிராக ராகுல் காந்தி பற்ற வைத்த நெருப்பு இந்தியா முழுவதும் பற்றி எரியட்டும்.

விரிவான விளக்கம்
2024ஆம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வாக்கு திருட்டில் ஈடுப்பட்டதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் இதனை கண்டுகொள்ளமால் இருப்பதாகவும், இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் வாக்கு திருடர்களை பாதுகாப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் இராணுவ சீருடை அணிந்து தேசிய கொடியுடன் ஊர்வலமாக செல்லும் வீடியோவை பதிவிட்டு, ’வாக்கு திருட்டு பற்றி ராகுல் காந்தி பேசிவரும் நிலையில், அது தொடர்பாக பீகாரில் பாஜக மற்றும் நிதீஷ் குமார் ஆட்சிக்கு எதிராக இராணுவ வீரர்கள் போராட்டம் செய்வதாக’ சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’Aprajita Nafs Nefes’ என்ற ‘எக்ஸ்’ பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அதில், ‘முன்னாள் இராணுவ வீரர்கள், தற்போது 112 அவசர எண் சேவையில் வேலை செய்பவர்கள் செப்டம்பர் 9ஆம் தேதியன்று பீகாரின் தலைநகரான பாட்னாவின் தெருக்களில் இறங்கி நிதீஷ் குமார் அரசாங்கத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி போராடி வருகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
🇮🇳Former Army men and drivers of the Dial-112 emergency service in Bihar poured into the streets of Patna on Tuesday, 9 September 2025. They marched from Gardanibagh to Kargil Chowk, waving the tricolour and raising slogans against Nitish Kumar’s state government.
The… pic.twitter.com/ygJlqhAowc
இதனை அடிப்படையாகக் கொண்டு மேலும் தேடுகையில், ‘THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, ‘பீகார் தலைநகரமான பாட்னாவில் 112 அவசர எண் சேவையில் வேலை செய்யும் ஓட்டுநர்கள் பணிச்சூழல் மேம்பாட்டிற்காகவும் ஊதிய உயர்விற்காகவும் தேசிய கொடியை ஏந்தி அரசாங்கத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பி தெருக்களில் பேரணி சென்றதாக’ தெரியவருகிறது.

அதேபோல் ’PATNA PRESS’ என்ற இணைய செய்தித்தளத்திலும் ‘112 அவசர எண் சேவையில் வேலை செய்யும் முன்னாள் இராணுவ வீரர்கள் மேம்பட்ட பணிச் சூழலுக்காகவும், ஊதிய உயர்வுக்காகவும், அரசு பணியாளர்களாக அங்கீகரிக்கச் சொல்லியும் போராடி வருவதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.


இதிலிருந்து பரப்பப்படும் வீடியோ, பீகாரில் 112 அவசர எண் சேவையில் ஓட்டுநர்களாக வேலை செய்யும் முன்னாள் இராணுவ வீரர்கள் ஊதிய உயர்வு கேட்டு நிதீஷ் குமார் அரசாங்கத்திற்கு எதிராக போராடிய போது எடுக்கப்பட்டு வீடியோ என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
பீகாரில் , 112 அவசர எண் சேவையில் வேலை செய்யும் முன்னாள் இராணுவ வீரர்கள் ஊதிய உயர்வு கேட்டு தெருவில் போராடிய போது எடுக்கப்பட்ட வீடியோவை, வாக்கு திருட்டிற்கு எதிராக இராணுவ வீரர்கள் போராடியதாக தவறாக பரப்பப்படுகிறது.