YouTurn

திடீரென்று மின்சார கட்டண உயர்வு என்று பொய் தகவலை பரப்பும் அர்ஜூன் சம்பத்!

திடீரென்று மின்சார கட்டண உயர்வு என்று பொய் தகவலை பரப்பும் அர்ஜூன் சம்பத்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அர்ஜுன் சம்பத் கூறும் இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பு கடந்த 2025 ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதிலும், அனைத்து வணிக நிறுவனங்களையும் இந்த கட்டண உயர்வு பாதிக்காது. பொதுவான வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிக நிறுவனங்களுகான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அரசே மானியமாக வழங்குகிறது. பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே 3.16 சதவீத கட்டண உயர்வால் செலுவுகள் அதிகரிக்கும்.

பரவிய செய்தி

மகளிர்க்கு ஐயாயிரம் ரூபாய் ஒரு புறம் வழங்கிவிட்டு மறுபுறம் வணிக நிறுவனங்களுக்கு திடீரென்று மின்சார கட்டண உயர்வை அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம் ...??? கோயில்களுக்கு வியாபார தலங்களுக்கு உரிய மின்கட்டன நடைமுறை இது பொது மக்களை பாதிக்கும்

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

மகளிர்க்கு ஐயாயிரம் ரூபாய் ஒரு புறம் வழங்கிவிட்டு மறுபுறம் வணிக நிறுவனங்களுக்கு திடீரென்று மின்சார கட்டண உயர்வை அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கூறி News Tamil 24x7 ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத். 

அந்த நியூஸ் கார்டில் பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கான 3.16% மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல் என்றும், 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கு மின்கட்டண உயர்வு இல்லை என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிந்தது. 


உண்மை என்ன? 

அர்ஜூன் சம்பத் பதிவிட்ட இந்த நியூஸ் கார்ட் குறித்து முதலில் தேடினோம். அப்போது News Tamil 24x7 ஊடகத்தில் ”மின் கட்டணம் உயர்வு.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!” என்ற தலைப்பில் ஜூன் 30, 2025 அன்று வெளியான செய்தி ஒன்றை பார்க்க முடிந்தது. அதில் பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்களுக்கு 3.18% மின்கட்டண உயர்வு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதிலிருந்து இது 2025ஆம் ஆண்டு வெளியான செய்தி என்பதை அறிய முடிந்தது. 


இது குறித்து மேலும் தேடிய போது, தினமணி ஊடகத்தில் ஜூலை 01, 2025 அன்று ”பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு 3.16% மின்கட்டணம் உயர்வு: இன்றுமுதல் அமல்” என்ற தலைப்பில் வெளியான செய்தியை பார்க்கமுடிந்தது. அதில் பொதுவான வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிக நிறுவனங்களுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அரசே மானியமாக வழங்குகிறது. பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே 3.16 சதவீத கட்டண உயர்வால் செலுவுகள் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

எனவே, தமிழ்நாட்டில் தற்போது திடீரென்று வணிக நிறுவனங்களுக்கான மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக 'இந்து மக்கள் கட்சி'யின் தலைவர் அர்ஜுன் சம்பத் பொய்யான தகவலை பரப்பி வருகிறார். இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பு கடந்த 2025 ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதிலும், அனைத்து வணிக நிறுவனங்களையும் இந்த கட்டண உயர்வு பாதிக்காது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க