யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது இரண்டு மாதம் பழைய செய்தி ஆகும்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கடந்த மார்ச் 25ஆம் தேதியன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியது பாஜக அதிமுக கூட்டணி குறித்த விவாதத்தை அரசியல் வட்டாரத்தில் கிளப்பியது. பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை தடையாக இருப்பதாகவும் அதனால் அவர் மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.
த்தா போட்றா வெடியை 💥💥#Annamalai pic.twitter.com/sv10imsM3g
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலையே தொடர்வார் என்று செய்தி வெளியானதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் செய்தியில் ’News Tamil’ செய்தி ஊடகத்தின் முத்திரை இருப்பதைக் காண்கிறோம். இதனை அடிப்படையாக கொண்டு ’அண்ணாமலை மாநில தலைவராக தொடர்வார் - News Tamil’ என்ற Keywords கொண்டு இணையத்தில் தேடுகையில், ’News Tamil’ யூட்யூப் தளத்தில் இந்த செய்தியைக் காண முடிந்தது.

அதில், இந்த செய்தி கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த செய்தியில் ’அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணாமலையே பாஜக தலைவராக தொடர்வார்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து இது இரண்டு மாதம் பழைய செய்தி என்பது உறுதியாகிறது. வேறொரு சந்தர்ப்பத்தில் வெளியான செய்தியை தற்போதைய சூழலோடு தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படுகிறது.
முடிவு:
அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக தொடர்வது பற்றிய இரண்டு மாதங்கள் பழைய செய்தியை தற்போதைய செய்தி போல் பொய்யாக பரப்பிவருகின்றனர்.
