YouTurn

பாஜக யாத்திரையில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்காக 200கி பீப் பிரியாணி தயாரானதாகப் பரவும் போலிச் செய்தி !

பாஜக யாத்திரையில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்காக 200கி பீப் பிரியாணி தயாரானதாகப் பரவும் போலிச் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தமிழக பாஜக தலைவர் மேற்கொள்ளும் பாதயாத்திரையின் துவக்கவிழாவில் கலந்துகொள்ளும் கோவா மற்றும் கேரள நிர்வாகிகளுக்காக பிரத்யேகமாக தயாராகும் 200 கிலோ "பீஃப் பிரியாணி". கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சமையல் கலைஞர்களைக் கொண்டு தயாராகிறது

Twitter link | Archive link

விரிவான விளக்கம்

மிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் பாத யாத்திரையின் துவங்க விழா நிகழ்ச்சி ஜூலை 28ம் தேதி இராமேஸ்வரத்தில் நடத்தப்பட்டது. இதற்காக கோவா மற்றும் கேரளாவில் இருந்து வந்த பாஜக நிர்வாகிகளுக்காக 200கி பீப் பிரியாணி தயாரானதாக தந்தி டிவி நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.



உண்மை என்ன ?

பாஜகவின் யாத்திரை குறித்து வெளியான செய்திகள் தொடர்பாக தந்தி டிவி சேனலில் தேடுகையில், பாதயாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு உணவு தயாரிப்பு பணி மும்முரம் என ஜூலை 28ம் தேதி செய்தி வெளியாகி இருக்கிறது.



Twitter link 

தந்தி டிவி வெளியிட்ட செய்தியில், " தமிழக பாஜக சார்பில் 'என் மண் என் மக்கள் யாத்திரை' இன்று மாலை துவக்கம் ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விழா மேடையை பார்வையிட்டார் அண்ணாமலை. அண்ணாமலை பாதயாத்திரை துவக்க விழாவில் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை செல்கிறார் அண்ணாமலை " என்றே உள்ளது.



மேற்காணும் செய்தியில், 200 கிலோ பீப் பிரியாணி தயார் செய்ததாக போலியான செய்தியையும், படங்களையும் வைத்து எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க : அண்ணாமலையின் பாத யாத்திரை வாகனத்தின் படுக்கை வசதி எனப் பரவும் தவறான புகைப்படம் !

மேலும் படிக்க : இராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டா திருடும் பாஜகவினர் எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட செய்தி !

முடிவு : 

நம் தேடலில், தமிழ்நாடு பாஜக தலைவர் மேற்கொள்ளும் பாதயாத்திரையின் துவக்கவிழாவில் கலந்துகொள்ளும் கோவா மற்றும் கேரள நிர்வாகிகளுக்காக 200 கிலோ பீப் பிரியாணி தயார் செய்யப்பட்டதாகப் பரவும் செய்தி போலியானது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க