YouTurn

‘சொந்த பந்தங்களிடம் தலை காட்ட முடியவில்லை’ என அண்ணாமலை மனைவி கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

‘சொந்த பந்தங்களிடம் தலை காட்ட முடியவில்லை’ என அண்ணாமலை மனைவி கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை நண்பர்கள் பணத்தில் அண்ணாமலை குடும்பம் நடத்திவரும் நிலையில் மனைவி அகிலா பேட்டி.

Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

பாஜக தலைவர் அண்ணாமலை சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, தனக்கு மாதம் 7 முதல் 8 லட்ச ரூபாய் செலவாவதாகவும், அதனை நண்பர்களை வைத்துச் சமாளித்து வருவதாகவும் கூறியிருந்தார். 

இந்நிலையில் அண்ணாமலையின் மனைவி அகிலா பேட்டி அளித்ததாகத் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றினை திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அதில், “சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை நண்பர்கள் பணத்தில் அண்ணாமலை குடும்பம் நடத்திவரும் நிலையில் மனைவி அகிலா பேட்டி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 





உண்மை என்ன ? 

பரவக் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டில் ‘30.06.2023’ என்ற தேதி உள்ளது. இதனைக் கொண்டு அந்த தேதியில் தந்தி டிவி அப்படி ஏதேனும் நியூஸ் கார்டினை வெளியிட்டுள்ளதா என அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தேடினோம். அப்படி எந்த செய்தியையும் அவர்கள் பதிவிடவில்லை.

அண்ணாமலையின் மனைவி அகிலா கூறியதாகப் பரவக் கூடிய தகவல் குறித்து வேறு ஏதேனும் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளதா என இணையத்தில் தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. 



Archive link

மேற்கொண்டு இது பற்றித் தேடியதில், பரவக் கூடிய நியூஸ் கார்டுக்கு மறுப்பு தெரிவித்து தந்தி டிவி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், இந்த செய்தி தந்தி தொலைக்காட்சி வாயிலாக பகிரப்படவில்லை’ எனக் கூறியுள்ளனர். இவற்றிலிருந்து அண்ணாமலை மனைவி அகிலா பேட்டி எனப் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது. 

முடிவு : 

நம் தேடலில், சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை மனைவி கூறியதாகப் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு உண்மை அல்ல. அது போலியாக எடிட் செய்து பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க