YouTurn

முதல்வர் ஸ்டாலின் மீது இரண்டு CBI வழக்குகள் இருப்பதாக பொய் பரப்பும் அண்ணாமலை!

முதல்வர் ஸ்டாலின் மீது இரண்டு CBI வழக்குகள் இருப்பதாக பொய் பரப்பும் அண்ணாமலை!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலையொட்டி அளித்துள்ள உறுதிமொழிப் பத்திரத்தில், தன்மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் எதுவும் இல்லை என்றே குறிப்பிட்டுளார். இந்நிலையில் அண்ணாமலை ஆதாரமற்ற பொய் செய்தியைப் பரப்பி வருகிறார்.

பரவிய செய்தி

முதல்வர் ஸ்டாலின் மீது இரண்டு CBI வழக்குகள் இருக்கிறது - அண்ணாமலை, பாஜக முன்னாள் மாநில தலைவர்

image.png

Youtube Link 

விரிவான விளக்கம்

உடுமலைபேட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்காக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தீவிரமாக பரப்புரை மேற்கொண்டார். அப்போது முதல்வர் ஸ்டாலின் மீது இரண்டு CBI வழக்குகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். 


உண்மை என்ன? 

முதல்வர் ஸ்டாலின் மீது இரண்டு CBI வழக்குகள் உள்ளதா என்பது குறித்து ஊடகங்களில் ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது இது போன்ற எந்த செய்தியும் வெளியாகவில்லை.


இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலையொட்டி அளித்துள்ள உறுதிமொழிப் பத்திரத்தில் இது குறித்து ஏதேனும் தகவல் உள்ளதா என்பதை தேடினோம். சரியாக 3ஆம் பக்கத்தில் குற்றவழக்குகள் குறித்து குறிப்பிட்டிருந்தார். அதில் ”தன்மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் எதுவும் இல்லை என்று உறுதியளிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுளார். இந்நிலையில் அண்ணாமலை ஆதாரமற்ற பொய் செய்தியைப் பரப்பி வருகிறார். மேலும் ‘சாணக்யா டிவி’-யும் அண்ணாமலை பரப்பும் பொய்யை செய்தியாக வெளியிட்டுள்ளது.

image.png


முடிவு: 

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, முதல்வர் ஸ்டாலின் மீது இரண்டு CBI வழக்குகள் இருப்பதாக பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை பரப்பும் செய்திகள் தவறானவை.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க