YouTurn

அண்ணாமலையின் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

அண்ணாமலையின் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தவிர்க்கமுடியாத காரணங்களால் பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை ரத்து - தமிழக பாஜக

Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பாத யாத்திரை எனக் கூறிவிட்டு பெரும்பாலும் வாகனத்தில் செல்கிறார் என்கிற விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையிலும் தனது யாத்திரையைத் தொடர்ந்த வண்ணம் உள்ளார்.



இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை ரத்து செய்யப்படுவதாகத் தமிழ்நாடு பாஜக அறிவித்துள்ளது என ‘நியூஸ் ஜெ’ பெயரிடப்பட்ட கார்டு ஒன்று  சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

பரவக் கூடிய நியூஸ் கார்டு குறித்து சமூக வலைத்தளங்களில் தேடியதில் அதே தகவல் கொண்ட பல பதிவுகள் நேற்றைய தினத்தில் இருந்து (ஆகஸ்ட்,10) பரவுவதை காண முடிந்தது. ஆனால், அவை நியூஸ் ஜெ பெயரில் இல்லை. மாறாக அப்பதிவுகளில் வெறும் தகவல் மட்டுமே இடம்பெற்றிருந்தது.



Archive link  

மேலும் பரவக் கூடிய நியூஸ் கார்டில் எப்போது வெளியிடப்பட்டது எனத் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே நியூஸ் ஜெ-வின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். அப்படி எந்த கார்டும் அவர்கள் பக்கத்தில் இல்லை.



Facebook link

மேற்கொண்டு தேடியதில், பரவக் கூடிய நியூஸ் கார்டு வடிவத்திலேயே கடந்த 8ம் தேதி ஆவின் தயிர் விலை ஏற்றம் குறித்து வெளியிடப்பட்டிருந்த கார்டினை காண முடிந்தது. அதில், ‘ஆவினில் முன்னறிவிப்பு இன்றி தயிர் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி’ என்று உள்ளது. அந்த கார்டில் அண்ணாமலை குறித்த செய்தியைப் போலியாக எடிட் செய்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.



யாத்திரை தொடர்பான புகைப்படங்களை அண்ணாமலை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இன்றைய தினமும் (ஆகஸ்ட், 11) சாத்தூரில் அவர் மக்களைச் சந்தித்த படங்களை பதிவு செய்துள்ளார். ஆனால், நேற்றைய தினத்தில் இருந்தே யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. இவற்றில் இருந்து இது தவறான தகவல் என்பதை அறிய முடிகிறது.



Archive link 

இதேபோல் யாத்திரையை ரத்து செய்யக் கோரி பாஜக டெல்லி தலைமை அண்ணாமலையிடம் அறிவுறுத்தியுள்ளது. இனி யாத்திரை நடைபெறாது என்ற தகவல்கள் பரவியது. ஆனால், மீண்டும் யாத்திரை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க : அண்ணாமலையின் பாத யாத்திரை வாகனத்தின் படுக்கை வசதி எனப் பரவும் தவறான புகைப்படம் !

இதற்கு முன்னர் அண்ணாமலையின் யாத்திரை தொடர்பாகப் பரப்பப்பட்ட போலிச் செய்திகள் குறித்த உண்மைகளையும் யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.

மேலும் படிக்க : அண்ணாமலையின் யாத்திரையில் பெண்கள் மது அருந்துவதாகப் பரவும் ஆந்திரா வீடியோ !

முடிவு : 

நம் தேடலில், அண்ணாமலையின் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாகப் பரவும் நியூஸ் ஜெ-வின் கார்டு உண்மையானது அல்ல. அது போலியாக எடிட் செய்யப்பட்டது. பாஜக தரப்பிலும் அப்படி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. யாத்திரை தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது என்பதை அறிய முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க