YouTurn

விரதம் இருந்தால் புற்றுநோய் செல்கள் அழியுமா? அண்ணாமலையின் உருட்டு!

விரதம் இருந்தால் புற்றுநோய் செல்கள் அழியுமா? அண்ணாமலையின் உருட்டு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

விரதம் இருப்பது புற்றுநோய் சிகிச்சையில் நேர்மறையான பலன்களை கொடுக்கிறது என்ற உண்மையை திரித்து, அது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்று அண்ணாமலை தவறான தகவலை பரப்பி வருகிறார்.

பரவிய செய்தி

24 மணி நேரம் விரதம் இருந்தால் புற்றுநோய் செல்கள் அழிந்துவிடும். ஒரு வாரம் விரதம் இருங்கள் மொத்த புற்றுநோய் செல்களும் அழிந்துவிடும்.


  • அண்ணாமலை, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்.


Insta Link 



X link 

விரிவான விளக்கம்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விரதம் இருப்பது பற்றி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. 24 மணி நேரம் விரதம் இருந்தால் புற்றுநோய் செல்கள் அழிந்துவிடும். அனைவரது உடலிலும் புற்றுநோய் செல்கள் இருக்கின்றன. உடலை சுத்தம் செய்ய வேண்டுமென்றால், ஒரு வாரம் விரதம் இருங்கள் மொத்த புற்றுநோய் செல்களும் அழிந்துவிடும். ஆனால் தற்போது நாம் விரதம் இருக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டோம்’ என்று பேசினார்.


இதேபோல், ராஜ ராஜ சோழன் என்ற மருத்துவர், 'விரதம் இருப்பது புற்றுநோய் செல்களை அழிக்கும்' என்று பேசிய வீடியோவும் அண்ணாமலைக்கு ஆதரவாக தற்போது பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?


விரதம் இருப்பதால் புற்றுநோய் செல்கள் அழியமோ? என்பது குறித்து தேடினோம். ‘PubMed’ என்ற ஆய்விதழ் தளத்தில் வெளியாகியிருந்த ஆய்வு கட்டுரை ஒன்றில், ‘உண்ணாமல் விரதம் இருப்பதால் புற்று பரவியுள்ள உயிரணுக்கள் (Cancer Cells) தன்னை தகவமைத்துக் கொண்டு வளர்வதற்கான சூழலை கட்டுப்படுத்த முடிகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், விரதம் இருப்பது எவ்வாறு புற்றுநோய் சிகிச்சைக்கு நேர்மறையான வகையில் உதவுகிறது என்பது குறித்த முழுமையாக இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 



அதேபோல், ‘European Journal of Clinical Medicine’ என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில், குறிப்பிட்ட இடைவேளைகள் விட்டு உண்ணாமல் விரதம் ‘(Intermittent fasting (IF)’ Insulin-like Growth Factor 1 (IGF-1) என்ற மூலக்கூறுகளை குறைப்பதன் மூலம் புற்று வளர்வதை தடுக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும் விரதம் இருப்பதால் புற்றுநோய் உயிரணுக்கள் அழிக்கப்படுவதை ஒரு உயிரணு தன்னை தானே அழித்துக்கொள்ளும் ‘Autophagy’ நிகழ்முறையால் நடப்பதாக நம்பப்படுகிறது. 


ஆனால் இந்த ‘Autophagy’ என்ற நிகழ்முறை, சில நேரங்களில் உயிரணுக்களில் சிதைந்த புரதங்கள் மற்றும் பிற பகுதிகளை அழித்து புற்றுநோய் பரவாமல் தடுக்கிறது. அதேபோல் சில நேரங்களில் புற்று வளர்ந்து பரவுவதற்கும் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. 


மேலும், 'விரதம் இருப்பது புற்றுநோய் செல்களை அழிக்கும்' என்று பேசிய ராஜ ராஜ சோழன் என்ற மருத்துவர் புற்றுநோய் நிபுணர் அல்ல. அவர் Naturopathy & Yoga Sciences மட்டுமே படித்திருக்கிறார். இது நவீன அறிவியல் மருத்துவமான MBBS-ல் சேராது என்பது மட்டுமல்ல, இது இந்திய மருத்துவ முறைகளாக அங்கீகரிக்கப்பட்ட சித்தா, ஆயுர்வேத போன்றவற்றில் கூட சேராது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, விரதம் இருப்பது புற்றுநோய் சிகிச்சையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் சொன்னாலும் அது புற்றுநோய்க்கு முழுமையான தீர்வு என்று எங்கும் சொல்லப்படவில்லை. 


முடிவு: 


உண்ணாமல் விரதம் இருப்பது புற்றுநோய் சிகிச்சையில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் சொல்வதை திரிந்து, அது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்று என்று தவறான தகவலை அண்ணாமலை பரப்புகிறார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க