YouTurn

ஆரத்தி எடுத்தவருக்கு பணம் கொடுத்த அண்ணாமலை எனப் பரவும் பழைய வீடியோ!

ஆரத்தி எடுத்தவருக்கு பணம் கொடுத்த அண்ணாமலை எனப் பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

ஓட்டுக்கு பணம் கொடுக்காத உத்தமபுத்திரன்!



X Link | Archive Link

விரிவான விளக்கம்

2024 மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் மார்ச் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் தேர்தல் ஆணையத்தால் இன்று வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் கட்சித் தலைவர்கள் பலரும் இந்தியா முழுவதும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோயம்புத்தூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு யாருக்கு தெரியாமல் தட்டுக்கு அடியில் பணம் கொடுப்பதைப் பாருங்கள் என்று கூறி 17 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் வீடியோவில் அண்ணாமலை அந்த பெண்ணிற்கு தட்டுக்கு அடியில் பணம் கொடுப்பதையும் தெளிவாக பார்க்க முடிகிறது.



Archive Link:



உண்மை என்ன?

பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்ததில் இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.

DAILY FOCUS TAMIL என்ற யூடியூப் பக்கத்தில் 2023 ஜூலை 30 அன்று “ஆரத்தி எடுக்க சொல்லி அலுங்காம தட்டுக்கடியில் காசு கொடுத்த அண்ணாமலை ! அட அத நீங்களே பாருங்க !" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளதைக் காண முடிகிறது. மேலும் அதில் இது "என் மண் என் மக்கள்" யாத்திரையின் போது எடுக்கப்பட்டது என்றும் கூறப்பட்டிருந்தது.



இதன் மூலம் பரவி வரும் வீடியோ, ராமாநாதபுரம் மாவட்டத்தில் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற யாத்திரையை தொடங்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.

மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரும், "இது கடந்த 2023 ஜூலையின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை காவல்துறை விசாரணையின் மூலம் அறிய முடிகிறது. இது குறித்து தவறாக பரவும் செய்திகள், காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்" என்றும் குறிப்பிட்டு மார்ச் 29 அன்று தனது பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.



மேலும் படிக்க: மக்களவை தேர்தலுக்காக அண்ணாமலையை சந்தித்த உதயநிதி எனப் பரவும் தவறான செய்தி!

இதற்கு முன்பும் அண்ணாமலை குறித்து பரவிய பல செய்திகள் குறித்து ஆய்வு செய்து, நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: ‘இந்து தெய்வமான சக்தியை அவமதித்த ராகுல்காந்தி’ என பொய் பரப்பும் அண்ணாமலை!

முடிவு:

நம் தேடலில், ஆரத்தி எடுத்தவருக்கு பணம் கொடுத்த அண்ணாமலை எனப் பரவும் வீடியோ தற்போதைய மக்களவை பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதையும், இது அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" யாத்திரையின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க