YouTurn

அண்ணாமலை மதுவந்தியின் காலில் விழுந்ததாகப் பரவும் பாஜக எஸ்.ஜி.சூர்யாவின் வீடியோ!

அண்ணாமலை மதுவந்தியின் காலில் விழுந்ததாகப் பரவும் பாஜக எஸ்.ஜி.சூர்யாவின் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அண்ணாமலை மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார் சரி.. மதுவந்தி இடது பக்கம் யாரு என்று தெரியுதா மக்களே ?



X Link | Archive Link

விரிவான விளக்கம்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மதுவந்தியின் காலில் விழுவதைப் பாருங்கள் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அப்பதிவுகளில் மதுவந்தியின் இடதுப்பக்கம் நடிகர் விஜய்யின் அம்மாவான, ஷோபா சந்திரசேகர் இருப்பதைப் பாருங்கள் என்றும் குறிப்பிட்டு பரப்பப்படுகிறது.



மேலும் சில பதிவுகளில் ஷோபா சந்திரசேகர் பாஜக கட்சியைச் சேர்ந்த ஒருவரை சந்தித்துள்ளதாகவும் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதையும் பார்க்க முடிகிறது.


உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த புகைப்படத்தோடு தொடர்புடைய வீடியோ பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஜி.சூர்யாவின் எக்ஸ் பக்கத்தில் மார்ச் 8 அன்று பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

அதில், "முன்னாள் தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினரும், 2024-ஆம் ஆண்டிற்கான பத்மவிபூஷன் விருது பெறுபவருமான திருமதி.வைஜெய்ந்திமாலா அம்மாவிடம் சென்னையில் ஆசி பெற்றேன்" என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் அதில் எஸ்.ஜி.சூர்யா நடிகை வைஜெயந்திமாலாவின் கால்களில் விழுவதையும் பார்க்க முடிகிறது. 



இதே போன்று மதுவந்தியின் எக்ஸ் பக்கத்திலும், அவர்களுடைய ஆசிர்வாதத்தை நீங்கள் (எஸ்.ஜி.சூர்யா) பெற்றதில் மகிழ்ச்சி, என் அத்தை மிகவும் தெய்வீகமான மனிதர் என்று குறிப்பிட்டு இதே வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.



இதன் மூலம் அண்ணாமலை மதுவந்தியின் காலில் விழுந்ததாக பரவும் தகவல்கள் தவறானவை என்பது தெளிவாகிறது.

மேலும் ஷோபா சந்திரசேகரும், பாஜக நிர்வாகியும் சந்திப்பதாக பரவும் புகைப்படம் குறித்து தேடியதில், எம்.எம்.ஆர்.மதன் என்பவரது எக்ஸ் பக்கத்தில் மரியாதை நிமித்தமாக தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் தாயார் ஷோபா சந்திரசேகரை சந்தித்தேன் என்று குறிப்பிட்டு பரவி வரும் புகைப்படம் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இது எங்கு எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.



மேலும் படிக்க: வதந்தி பரப்பும் மதுவந்தி.. சமஸ்கிருதத்தில் ஓம் சொல்லி ராணி எலிசபெத் உடலுக்கு மரியாதை எனப் பரவும் பழைய வீடியோ

முடிவு:

நம் தேடலில், அண்ணாமலை மதுவந்தியின் காலில் விழுந்ததாக பரவும் தகவல்கள் தவறானவை என்பதையும், பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா நடிகை வைஜெயந்திமாலாவின் காலில் விழும் வீடியோவைத் தான் சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க