YouTurn

தமிழ்நாட்டில் 11 ஆயிரம் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறதா? அண்ணாமலை சொல்லும் பொய்!

தமிழ்நாட்டில் 11 ஆயிரம் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறதா? அண்ணாமலை சொல்லும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1100 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. பதவி உயர்வு குறித்த வழக்கு காரணமாக அவை நிரப்பப்படாமல் இருக்கிறது.

பரவிய செய்தி

‘தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 11ஆயிரம் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது’ - அண்ணாமலை.


X Link

விரிவான விளக்கம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை, ‘தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 11ஆயிரம் தலைமை ஆசிரியர் காலி பணியிடங்கள் இருப்பதாக’ கூறினார்.



உண்மை என்ன?


தமிழ்நாட்டில் அரசுகள் பள்ளிகளில் தலைமையாசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து இணையத்தில் தேடினோம். ’இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் இது குறித்த செய்தியைக் காணமுடிந்தது.


2026 ஜனவரி மாதம்  வெளியான இந்த செய்தியில், ’தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் 1,036 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், நீதிமன்ற வழக்குகளின் காரணமாக இந்த பணியிடங்களை நிரப்ப இயலாத நிலை உள்ளதாகவும்’  பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.


image.png


இதேபோல், தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்த வழக்கு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்  1100 தலைமையாசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. 



இதிலிருந்து தமிழ்நாட்டில்  அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1100 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் அண்ணாமலை இதனை மிகைப்படுத்தி 11 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக பொய்யான தகவலைச் சொல்கிறார். 


மேலும், தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை தான் முன்னுரிமை பட்டியலில் பணியமர்த்த வேண்டும்;  முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை இந்த முன்னுரிமை பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் தான் இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


முடிவு:


தமிழ்நாட்டில்  அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1100 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதனை மிகைப்படுத்தி 11 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக பொய்யான தகவலை பரப்புகிறார் அண்ணாமலை. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க