YouTurn

அண்ணாமலை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா? உண்மை என்ன?

அண்ணாமலை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பாரதபிரதமர் மோடி அவர்களின் ஆணைக்கிணங்க நானே விக்ரவாண்டி இடைத்தேர்தலில் நேரடியாக போட்டியிடுகிறேன் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு



X Link | Archive Link

விரிவான விளக்கம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்(MLA) புகழேந்தி உடல் நலக்குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமானார். இதனையடுத்து அந்த தொகுதி ஏப்ரல் 8 ஆம் தேதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10 அன்றும், வாக்குப்பதிவு ஜூலை 13 அன்றும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தற்போது இந்த தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பாக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாகக் கூறி புதிய தலைமுறை மற்றும் தந்தி டிவியின் நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. 





உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏதாவது அறிவிக்கை வெளியிட்டுள்ளாரா என்பது குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்தோம். தேர்தலில் அவர் போட்டியிடுவது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேலும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் விவரங்கள் குறித்து தேடியதில், இதுவரை தி.மு.க. சார்பில் மட்டுமே வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பதை உறுதிபடுத்த முடிந்தது. அதிமுக மட்டும் பாமக சார்பில் இன்னும் இழுப்பறியே நிலவி வருகிறது. பாஜக சார்பில் எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இச்செய்தி குறித்து புதிய தலைமுறை மற்றும் தந்தி டிவி ஊடகங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களிலும் தேடிப்பார்த்தோம். அதில் இதுகுறித்து எந்தவித நியூஸ் கார்டுகளும் வெளியாகவில்லை. 



இந்நிலையில் அண்ணாமலை கூறியதாகக் கூறி புதியதலைமுறை மற்றும் தந்தி டிவி நியூஸ்கார்டுகளை சிலர் எடிட் செய்து போலியாகப் பரப்பி வருகின்றனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

மேலும் படிக்க: 'ஜெகந்நாதர் கோவில் சாவியை கண்டுபிடிக்கவே பிரதமர் மோடி தியானம்..' அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

முடிவு:

நம் தேடலில், அண்ணாமலை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாகப் பரவும் புதியதலைமுறை மற்றும் தந்தி டிவியின் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க