யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அடுத்த முதல்வருக்கான பந்தயம் 2ஆவது இடத்தில் திமுக, தமிழ்நாட்டின் அடுத்த முதல்வருக்கான பந்தயத்தில் 36% ஆதரவுடன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் முதலிடம் என்று குறிப்பிட்டு புதியதலைமுறையின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
பரவிய செய்தி
அடுத்த முதல்வருக்கான பந்தயம்- 2ஆவது இடத்தில் DMK; தமிழ்நாட்டின் அடுத்த முதல்வருக்கான பந்தயத்தில் 36% ஆதரவுடன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்.18% பேரின் ஆதரவைப் பெற்று தவெக தலைவர் விஜய் 3வது இடம் பிடித்துள்ளார்; எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 10% ஆதரவுடன் 4வது இடம்; பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 9% ஆதரவுடன் 5வது இடத்தில் உள்ளார். சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்.
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், 2026-ல் தமிழ்நாட்டின் முதல்வராக யாருக்கு வாய்ப்புள்ளது? என்பது பற்றி சி-வோட்டர் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தி சமீபத்தில் அதன் முடிவுகளை வெளியிட்டது.
இந்நிலையில், அடுத்த முதல்வருக்கான பந்தயம்- 2ஆவது இடத்தில் திமுக, தமிழ்நாட்டின் அடுத்த முதல்வருக்கான பந்தயத்தில் 36% ஆதரவுடன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் முதலிடம் என்று குறிப்பிட்டு புதியதலைமுறையின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தமிழ்நாட்டின் அடுத்த முதல்வருக்கான பந்தயத்தில் 36% ஆதரவுடன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் முதலிடம் என்று குறிப்பிட்டு எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 27% வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார் என்றே அனைத்து செய்திகளிலும் இருந்தது
எனவே பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து புதிய தலைமுறையின் சமூக ஊடகப் பக்கங்களில் தேடிப் பார்த்தோம். மார்ச் 29 அன்று “முதல்வர் மு.க.ஸ்டாலின் 27% வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் நடிகர் விஜய் 18% ஆதரவுடன் இரண்டாமிடம் பெற்றுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 10% ஆதரவுடன் மூன்றாமிடமும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 9% ஆதரவுடன் நான்காமிடமும் பெற்றுள்ளனர்” என்று குறிப்பிட்டே நியூஸ் கார்டு வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், புதியதலைமுறையின் நியூஸ்கார்டை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.

முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டின் அடுத்த முதல்வருக்கான பந்தயத்தில் 36% ஆதரவுடன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் முதலிடம் என்று குறிப்பிட்டு பரவும் புதியதலைமுறையின் நியூஸ்கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.