YouTurn

நடிகை நயன்தாராவை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் எனப் பரவும் பழைய புகைப்படம்!

நடிகை நயன்தாராவை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் எனப் பரவும் பழைய புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நயன்தாராவைச் சந்திக்க நேரமிருக்கு , கருணாபுரம் போகத் தான் நேரமில்லை!



X Link | Archive Link

விரிவான விளக்கம்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. இந்த கோர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகை நயன்தாராவை சந்தித்துள்ளார். ஆனால் அவருக்கு கருணாபுரம் போகத் தான் நேரமில்லை என்று கூறி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, நடிகை நயன்தாரா மற்றும் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.



உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படம் குறித்து ஆய்வுசெய்து பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதை அறியமுடிந்தது.

Hindustan Times பரவி வரும் புகைப்படத்தை குறிப்பிட்டு, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 06ஆம் தேதி அன்று "நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9; தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டது. படத்தைப் பார்க்கவும்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.

அதில், "நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் திருமணம் செய்துகொள்ள தயாராக உள்ளார். ஜூன் 9ஆம் தேதி வியாழன் அன்று சென்னையில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். வார இறுதியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதே போன்று, Times of India கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 06ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ள செய்தியிலும் பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிடப்பட்டு "நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்களது திருமணத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தனர்.



இதன்மூலம் கடந்த 2022ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை, தற்போது எடுக்கப்பட்டது போல சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.

மேலும் படிக்க: விவசாயிகள் போராட்டத்திற்கு தோனி ஆதரவு தெரிவித்ததாகப் பரவும் பழைய புகைப்படம்!

மேலும் படிக்க: விராட் கோலியைத் தொடர்ந்து ஷாருக்கான் தனது பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிட்டதாகப் பரவும் பழைய புகைப்படம் !

முடிவு:

நம் தேடலில், நடிகை நயன்தாராவை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என தற்போது சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம், கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை அறியமுடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க