YouTurn

அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வந்த 12 தங்க வாகனங்கள் எனப் பரவும் தெலங்கானா கோவில் வீடியோ !

அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வந்த 12 தங்க வாகனங்கள் எனப் பரவும் தெலங்கானா கோவில் வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவிலிருந்து 11 வாகனங்கள் மற்றும் ஒரு தேர் நன்கொடையாக வழங்கப்பட்டது. அனைத்தும் தூய தங்கத்தால் ஆனது..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

யோத்தி ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து 23-ம் தேதி முதல் அயோத்தி ராமர் கோவில் பக்தர்களின் பொது தரிசனத்திற்காக திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவிலிருந்து 11 வாகனங்கள் மற்றும் ஒரு தேர் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தூய தங்கத்தால் ஆனது என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், யானை வாகனம், சிங்க வாகனம் உட்பட பல்வேறு தங்க வாகனங்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.





உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதற்கு முன்பும் இதே வீடியோ, 'திருப்பதி தேவஸ்தானத்திற்கு NRI அமெரிக்கர்கள் வழங்கிய தங்க வாகனங்கள்' என்று கூறி கடந்த 2023 லேயே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதை காண முடிந்தது.



ஆனால் உண்மையில், இது அயோத்தி ராமர் கோவில் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்தோடு தொடர்புடைய வீடியோ அல்ல. தெலங்கானாவின் பத்ராத்ரி கொத்தகுடம் (Bhadradri Kothagudem) மாவட்டத்தில் உள்ள பத்ராசலம் ராமர் கோவிலில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ. 



இதனை, அமெரிக்காவில் உள்ள NRI இந்தியர்கள், "NRI வாசவி சங்கம், USA" என்ற NGO மூலம் பத்ராசலம் ராமர் கோவிலுக்கு 12 தங்க வாகனங்களை தானமாக வழங்கியுள்ளனர் என்று குறிப்பிட்டு V6 News Telugu என்ற யூடியூப் சேனலில் 2023 மார்ச் 21 அன்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.



இதே போன்று, 'News 18 தெலுங்கு' கடந்த 2023 ஜனவரி 25 அன்று "பத்ராத்திரி: ராமருக்கு புது வாகனங்கள்.. அழகு திருவீதி சேவை" என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தெற்கு அயோத்தி என்று அழைக்கப்படும் பத்ராசலம் ஸ்ரீ சீதாராமச்சந்திரசுவாமி தேவஸ்தானத்தில் (பத்ராசலம் கோயில்), சுவாமியின் திருவீதி சேவைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வரவுள்ளன.

புதிய வாகனங்களை வழங்க அமெரிக்காவின் வாசவி சங்கம் முன் வந்துள்ளது. கருடன், ஹனுமத், சேஷ சூர்யபிரபை, சந்திரபிரபை, ஹன்ஸ, அஸ்வ, கல்ப விருக்ஷ சர்வபௌமா, தங்க சிம்மாசனம், கஜ, சிம்ம வாகனங்கள் ஆகியவை வெண்கலத்தால் செய்யப்பட்டவை. சில தங்க முலாம் பூசப்பட்டுள்ளன." என்று குறிப்பிட்டும் செய்தி வெளியிட்டுள்ளது.



இதன் மூலம் பரவி வரும் வீடியோ தெலங்கானாவில் உள்ள பத்ராசலம் ராமர் கோவிலில் எடுக்கப்பட்டது என்பதையும், வீடியோவில் உள்ள பல வாகனங்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ளன என்பதையும் அறிய முடிகிறது. 

மேலும் படிக்க: அயோத்தி ராமர் கோயில் உண்டியலில் பணம் போடும் வீடியோ எனப் பரப்பப்படும் ராஜஸ்தான் கோயில்!

மேலும் படிக்க: முஸ்லீம் ஆணும், பெண்ணும் அயோத்தி ராமர் கோயிலுக்கு யாத்திரை செல்வதாகப் பரவும் போலி வீடியோ !

முடிவு: 

நம் தேடலில், அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவிலிருந்து 12 தங்க வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன என்று கூறி பரவும் வீடியோ தவறானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க