YouTurn

கருப்பு நிறத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள்.. தவறான நோக்கில் பரவும் AI வீடியோ!

கருப்பு நிறத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள்.. தவறான நோக்கில் பரவும் AI வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவும் இந்த வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவை தவறான நோக்கில் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

இந்த வீடியோ ஏன் இவ்வளவு வைரலாகிறது ? பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார், கருப்பு முடி மற்றும் கருமையான தோலைக் கண்டு தந்தை அதிர்ச்சியடைந்தார். அந்தப் பெண் வருட துவக்கத்தில் உத்தரபிரதேசத்திற்கு வந்து சென்றதாக கேள்வி..!!


X Link | Archive Link

விரிவான விளக்கம்

வெளிநாட்டில் ஒரு பெண்ணுக்கு கருப்பு நிற முடி மற்றும் கருப்பு நிற தோலுடன் இரட்டை குழந்தைகள் பிறந்ததால் கணவன் அதிர்ச்சியாகி அந்த பெண்ணிடம் கேள்வி கேட்பது போன்று வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் வீடியோ உண்மையானதல்ல என்பதை அறிய முடிந்தது. 


@br_ai_ded” என்ற டிக்டாக் பக்கத்தில் பரவி வரும் வீடியோ அக்டோபர் 31 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. டிக்டாக் செயலி மற்றும் இணையதளத்தை நாம் இங்கு பயன்படுத்த முடியாததால், மற்ற நாடுகளில் இருக்கும் நண்பர்களின் உதவியோடு இந்த பக்கத்தை ஆய்வு செய்து பார்த்தோம். அதில் பரவி வரும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 



மேலும் “@br_ai_ded” என்ற பயனரின் சுயவிவரப்பக்கத்தையும் ஆய்வு செய்ததில், பதிவு செய்யப்படும் வீடியோக்கள் அனைவரின் பொழுது போக்கு நோக்கிற்காக மட்டுமே என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். 



பரவி வரும் வீடியோவைப் போன்றே இவர் பல AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பல வீடியோக்களை பதிவு செய்துள்ளதையும் காண முடிந்தது. 



இதன் மூலம் ‘வெளிநாட்டில் ஒரு பெண்ணுக்கு கருப்பு நிற முடி மற்றும் கருப்பு நிற தோலுடன் இரட்டை குழந்தைகள் பிறந்ததால் கணவன் அதிர்ச்சி’ எனப் பரவும் இந்த வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவை தவறான நோக்கில் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. 


முடிவு: 


நம் பக்கத்தில், “வெளிநாட்டில் ஒரு பெண்ணுக்கு கருப்பு நிற முடி மற்றும் கருப்பு நிற தோலுடன் இரட்டை குழந்தைகள் பிறந்ததால் கணவன் அதிர்ச்சி” எனப் பரவும் வீடியோ போலியானது என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க