யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இஸ்ரேலிய தலைநகரமான டெல் அவிவில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது உண்மையே. ஆனால் பரவி வரும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
பரவிய செய்தி
எலும்பு கூடா உருக்குலைந்த பலஸ்த்தீன்... அதான் இல்ல நேத்து நைட் ஈரான்ட்ட சிக்கிய இஸ்ரேல் Tel Aviv..A
உச்ச தலைவர் கொ^ல் பட்ட பின்ன ஈரான் சிகப்பு கொடி ஏத்துனது துக்கம் அனுசரிக்கன்னு நினைக்கிறீங்க. ஆனா அதுக்கு பழி தீக்க ன்னு அன்நாட்டோட அர்த்தம்..

விரிவான விளக்கம்
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா பிப்ரவரி 28ஆம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலிய தலைநகரமான டெல் அவிவில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது என்று கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
இஸ்ரேலிய தலைநகரமான டெல் அவிவில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதா என்பதை தேடினோம். அப்போது அமெரிக்க ஊடகமான The Wall Street Journal ஊடகத்தில் 16 ஜூன், 2025 அன்று, ”Iranian Missile Barrage Destroys Buildings in Central Tel Aviv” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் டெல் அவிவில் உள்ள பல கட்டிடங்களை ஈரானில் இருந்து வந்த ஏவுகணைகள் சரமாரியாகத் தாக்கின என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் செய்தியில் உள்ள புகைப்படம், பரவி வீடியோவில் உள்ளதும் வெவ்வேறாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதை உறுதிச் செய்ய, பரவி வரும் வீடியோவை Hive Moderation, போன்ற செயற்கை நுண்ணறிவை கண்டறிய உதவும் இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் பரவி வரும் வீடியோ, 99.9% AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியானது.

முடிவு:
எனவே, இஸ்ரேலிய தலைநகரமான டெல் அவிவில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது உண்மையே. ஆனால் பரவி வரும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.