YouTurn

மூன்று தலையுடைய அதிசய குரங்கு என்று பரவும் ஏஐ வீடியோ!

மூன்று தலையுடைய அதிசய குரங்கு என்று பரவும் ஏஐ வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மூன்று தலையுடைய அதிசய குரங்கு எனப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பரவிய செய்தி

மூன்று தலையுடைய அதிசய குரங்கு

image.png

Instagram Link | Archived Link

விரிவான விளக்கம்

மூன்று தலை கொண்ட குரங்கு ஒன்று சாலையில் சுற்றுத் திரிவது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த வீடியோ கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Anmol Bohra என்ற பேஸ்புக் பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அதில் அக்டோபர் 22 அன்று ”Miracle of God” என்று தலைப்பிட்டு பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்தது. மேலும் அந்த வீடியோவில்  HIGGSFIELD Al என்ற வாட்டர் மார்க் இருந்ததையும், HIGGSFIELD Al மூலம் இந்த வீடியோ உருவாக்கப்பட்டது என்று hastagல் குறிப்பிட்டுருந்ததையும் பார்க்கமுடிந்தது. 


இதையடுத்து அந்த பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தி பார்த்தோம். அப்போது Bioவில் தான் ஒரு AI Artist என்று அந்த நபர் குறிப்பிட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் அந்த பக்கத்தில் AI மூலம் உருவாக்கப்பட்ட பல்வேறு வீடியோக்கள் இருந்ததையும் பார்க்கமுடிந்தது. 

image.png


இது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்குமோ என்பதை உறுதி செய்ய, பரவி வரும் வீடியோவின் screenshotகளை WAS IT AI இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் இந்த வீடியோ, AI மூலம் உருவாக்கப்பட்டது தான் என்பது உறுதியானது. 


முடிவு: 

எனவே, மூன்று தலையுடைய அதிசய குரங்கு எனப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. Anmol Bohra என்ற நபரால் AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க