YouTurn

விமானம் மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பாலம் கொண்டுவரப்பட்டதாக பரவும் AI வீடியோ!

விமானம் மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பாலம் கொண்டுவரப்பட்டதாக பரவும் AI வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இலங்கையில் சேதமைடைந்த பாலங்களை புனரமைப்பு செய்வதற்காக இந்தியாவில் இருந்து பேலி பாலங்களுக்கான பாகங்கள் கொண்டுவரப்பட்டது உண்மை தான். ஆனால் பரவி வரும் காணொளி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பரவிய செய்தி

இந்தியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்படும் 110 அடி நீளமுள்ள 10 பாலங்கள்..!!

image.png

Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

கடந்த நாட்களில் இலங்கையை தாக்கிய திட்வா புயல் காரணமாக அதிகளவான மக்கள் உயிரிழந்ததுடன், பலர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு சேதமடைந்த பாலங்களை மீண்டும் நிறுவுவதற்காக 110 அடி நீளமுள்ள பாலங்கள் இந்தியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்படுவதாக காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. 


உண்மை என்ன? 

இந்தியாவிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு பாலங்கள் கொண்டு செல்லப்பட்டதை குறித்து தேடினோம். அப்போது தினமணி ஊடகத்தில், “மழையால் தத்தளிக்கும் இலங்கைக்கு நகரும் பாலம்: இந்தியா தொடர்ந்து உதவி” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் இலங்கையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பெய்லி நகரும் பால அமைப்பு மற்றும் நூற்றுக்கணக்கான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை சி-17 குளோப் மாஸ்டர் விமானம் மூலம் அனுப்பியதாக இந்திய தூதரகம் தெரிவித்தது. இந்தப் பாலத்தை உடனடியாக அமைக்க இந்தியாவில் இருந்து பொறியாளர்கள் உள்பட 22 வல்லுநர்களும் சென்றுள்ளதாக தூதரகம் தெரிவித்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


மேலும் இது குறித்து தேடிய போது, இலங்கை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் விமானம் கொண்டு வந்த பேலி பாலத்தின் பாகங்கள் செயற்பாட்டு தேவைகளுக்கேற்ப பயன்படுத்தக்கூடியவை என்றும், பாலங்கள் அமைப்பதற்குத் தேவையான பொருட்கள் மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக அமைக்கக்கூடிய 110 அடி நீளமுள்ள இரு வழி பேலி பால அமைப்பும் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

image.png


இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய உயர் கமிஷன் தனது பேஸ்புக் பக்கத்தில், இந்திய விமானப்படையின் மற்றொரு C-17 குளோப்மாஸ்டர் விமானம் பெய்லி பாலப் பிரிவுகளை ஏற்றிக்கொண்டு இலங்கையில் தரையிறங்கியது என்று புகைப்படங்களுடன் பதிவிட்டுருந்ததை பார்க்கமுடிந்தது. 


இவ்வாறு விமானம் மூலம் பேலி பாலத்தின் பாகங்கள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், பரவி வரும் வீடியோவில் காட்டப்பட்ட விதத்தில் பாலங்கள் கொண்டுவரப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. எனவே இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காணொளியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. 


இதனால் decopy. Ai என்ற இணையதளத்தில் பரவி வரும் வீடியோவை பதிவிட்டு சோதித்து பார்த்தோம். அப்போது இது 95% ஏஐ மூலம் உருவாக்கப்ப்பட்ட காணொளி என்பதை உறுதி செய்யமுடிந்தது. 


முடிவு: 

எனவே, இலங்கையில் சேதமைடைந்த பாலங்களை புனரமைப்பு செய்வதற்காக இந்தியாவில் இருந்து பேலி பாலங்களுக்கான பாகங்கள் கொண்டுவரப்பட்டது உண்மை தான். ஆனால் பரவி வரும் காணொளி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க