YouTurn

ஆபத்தான 'மெலிசா' புயலின் காட்சி எனப் பரவும் வீடியோ.. உண்மை என்ன?

ஆபத்தான 'மெலிசா' புயலின் காட்சி எனப் பரவும் வீடியோ.. உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

'மெலிசா' புயலின் மையப் பகுதிக்குச் சென்று அமெரிக்க விமானப்படை வீரர்கள் எடுத்ததாகப் பரவும் இந்த வீடியோ உண்மையானது அல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பரவிய செய்தி

மேற்கிந்திய தீவுகள் ஜமைக்கா நாட்டுக்கு அருகே நிலைகொண்டு உள்ள 'மெலிசா' என்ற சூறாவளிப் புயலின் மையப் பகுதிக்குச் சென்று வீடியோ எடுத்த அமெரிக்க விமானப்படை வீரர்கள்! மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் சுழலும் இந்த புயல், ஜமைக்கா, ஹைதி, டோமினிகன் குடியரசு ஆகிய நாடுகளை புரட்டிப் போட்டு வருகிறது



Facebook Link | Archive Link

விரிவான விளக்கம்

கரீபியன் கடல் பகுதியில் உருவாகிய “மெலிசா” எனும் சூறாவளி 5ஆம் வகை புயலாக வலுப்பெற்று ஜமைக்கா நாட்டை தாக்கியது. இதனால் அந்த நாட்டில் பெரும் பேரிடர் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் 'மெலிசா' சூறாவளிப் புயலின் மையப் பகுதிக்குச் சென்று அமெரிக்க விமானப்படை வீரர்கள் எடுத்த வீடியோ என்று கூறி, வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் வீடியோவில் விமானத்தில் இருந்து புயல் சுழன்று வரும் காட்சியை படம் பிடித்திருப்பது போன்று உள்ளதை காணமுடிகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் வீடியோ உண்மையானது அல்ல என்பதை அறிய முடிந்தது. 


Earthimpacts” டிக்டாக் பக்கத்தில் பரவி வீடியோ அக்டோபர் 31 அன்று “AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ” என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. 



மேலும் “Earthimpacts” டிக்டாக் பக்கத்தில் இதே போன்று பல AI வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.



எனவே இதை உறுதி செய்ய “wasitai” இணையதளப் பக்கத்திலும், பரவி வரும் வீடியோவின் காட்சிகளை பதிவேற்றி ஆய்வு செய்து பார்த்தோம். ஆய்வின் முடிவில், இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ தான் என்பதை உறுதி செய்ய முடிந்தது.



முடிவு: 


நம் தேடலில், 'மெலிசா' என்ற சூறாவளிப் புயலின் மையப் பகுதிக்குச் சென்று அமெரிக்க விமானப்படை வீரர்கள் எடுத்ததாகப் பரவும் இந்த வீடியோ உண்மையானது அல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பதை தெளிவாக அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க