YouTurn

ஹனுமான் படத்தை வரையும் குரங்கு என்று தவறாகப் பரப்பப்படும் வீடியோ!

ஹனுமான் படத்தை வரையும் குரங்கு என்று தவறாகப் பரப்பப்படும் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பரவிய செய்தி

ஒரு குரங்கு ஹனுமான் படத்தை வரைகிறது.


Link

விரிவான விளக்கம்

சுவர் ஒன்றில் குரங்கு ஒன்று ஹனுமான் படத்தை வரைந்து கொண்டிருக்கிறது. அதனை சுற்றி நின்று மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோவை பதிவிட்டு ‘குரங்கு ஒன்று உண்மையிலே ஹனுமான் படத்தை வரைகிறது’ என்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன:

 

பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ‘Ajin Joseph’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது.


 

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தபோது, அதில் அவர் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காட்சிகளை உருவாக்குவதில் வல்லுநர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


 

மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விலங்குகளை மையப்படுத்தி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பல வீடியோக்களை காணமுடிந்தது. zomato delivery சீருடை அணிந்த குரங்கு குதிரையில் என்று உணவு விநியோகம் செய்வது, யானை விநாயகர் படத்தை வரைவது போன்ற பல வீடியோக்களை அவரது பக்கத்தில் காணலாம்.

 

மேற்கூறிய விவரங்களிலிருந்து, குரங்கு ஹனுமானை வரைவது போன்ற வீடியோ செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

 

முடிவு:

 

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்ட  வீடியோவை, உண்மையிலே குரங்கு ஒன்று ஹனுமானை வரைவதாக என்று தவறாக பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க