யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் நியூயார்க்கில் உண்மையாக நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்காக மெட்ரோ ரயிலில் திடீரென ஒரு நபர் சாகசம் செய்யும் போது, ரயிலின் மேற்பகுதி உடைந்து விழுவது போன்றொரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிறுக்குகூ🔥ங்க!,
இந்த ரீல் பைத்தியங்களால பொது இடங்கள்ல பெரிய தொல்லையா போச்சு!. pic.twitter.com/t1H7HuMc3F
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Georacio என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செப்டம்பர் 3 அன்று இந்த வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அந்த வீடியோவின் Comment பகுதியில், இது AI என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து இது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரவி வரும் வீடியோவின் screenshotகளை 'Was It AI' இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் இந்த வீடியோ, AI மூலம் உருவாக்கப்பட்டது தான் என்பது உறுதியானது.

அதே போல் அந்த இன்ஸாகிராம் பக்கத்தில், இதே போன்று ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பல்வேறு வீடியோக்கள் பதிவாகியிருந்ததையும் பார்க்கமுடிந்தது.

இதற்கு முன்பும் இதே போன்று ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : ‘பூமியில் தோன்றிய இறக்கை முளைத்த குதிரை’ என்று பரவும் AI வீடியோ!
‘விசித்திரமான உயிரினங்கள்’ என்று பரவும் AI வீடியோ!
முடிவு:
நம் தேடலில், நியூயார்க்கில் நடந்த சம்பவம் என்று கூறி பரவி வரும் வீடியோ, AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இதை உண்மை போல் நினைத்து பலரும் பரப்பி வருகின்றனர்.
