யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இஸ்ரேலில் பாம்பு மழை எனப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
பரவிய செய்தி
இஸ்ரேல்லில் வானத்தில் இருந்து மழைகொட்டுவதுபோல் பாம்புகள் பூமிய்யில் கொட்டுகிறது ஆண்டவனுடைய கோபபார்வை

விரிவான விளக்கம்
இஸ்ரேலில் பாம்பு மழை என்று கூறி சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சாலைகள் மற்றும் கார்கள் மீது கொத்து கொத்தாக பாம்புகள் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
உண்மை என்ன?
உண்மையில் இஸ்ரேலிலில் பாம்பு மழை பெய்திருந்தால் அது குறித்து, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும். ஆனால் எந்தவொரு உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களிலும் இது குறித்தான செய்திகள் வெளியாகியாகவில்லை.
இதையடுத்து அந்த வீடியோவில் பல்வேறு இடங்களில் பாம்புகள் தோன்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதனால் இது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தால், பரவி வரும் வீடியோவை Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம்.
ஆய்வின் முடிவில் பரவி வரும் வீடியோ, 98.7% இது AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியானது.

இதற்கு முன்பும் இதே போன்று ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : மேக வெடிப்புக் காட்சிகள் என்று கூறி பரவி வரும் AI வீடியோ!
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பாரசீக பாலம் என்று பரவும் AI புகைப்படம்!
முடிவு:
எனவே நம் தேடலில், இஸ்ரேலில் பாம்பு மழை எனப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.