YouTurn

‘விசித்திரமான உயிரினங்கள்’ என்று பரவும் AI வீடியோ!

‘விசித்திரமான உயிரினங்கள்’ என்று பரவும் AI வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘விசித்திரமான நாம் கண்டிராத உயிரினங்கள்’ என்று பரவி வரும் இந்த வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

விசித்திரமான நாம் கண்டிராத உயிரினங்கள்

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

விசித்திரமான நாம் கண்டிராத உயிரினங்கள் என்று கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் வித்தியசமான பல்வேறு உயிரினங்களை காணமுடிந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அப்போது oleg.pars என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அந்த வீடியோ ஆகஸ்ட் 13 அன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில் இந்த வீடியோ சுவிட்சர்லாந்தில் உள்ள swiss alps என்ற இடத்தில் எடுக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில் வேறு ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்பதை தேடி பார்த்தோம். அப்போது அந்த caption-ல் இந்த வீடியோ krea ai தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது என்பது தெரிவிக்கப்பட்டிருந்தது. 


அதே போல் அந்த பக்கத்தில், இதே போன்று ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பல்வேறு வீடியோக்கள் பதிவாகியிருந்ததையும் பார்க்கமுடிந்தது. 

image.png


இதை மேலும் உறுதி செய்ய, பரவி வரும் வீடியோவை Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் பரவி வரும் வீடியோ, 78.6% இது AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியானது. 


இதற்கு முன்பும் இதே போன்று ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.

மேலும் படிக்க :

‘பூமியில் தோன்றிய இறக்கை முளைத்த குதிரை’ என்று பரவும் AI வீடியோ!


கிருஷ்ண ஜெயந்தி அன்று குரங்குகள் உணவு அருந்தியதாக பரவும் AI வீடியோ!


முடிவு: 

நம் தேடலில், ‘விசித்திரமான நாம் கண்டிராத உயிரினங்கள்’ என்று பரவி வரும் இந்த வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க