YouTurn

மேக வெடிப்புக் காட்சிகள் என்று கூறி பரவி வரும் AI வீடியோ!

மேக வெடிப்புக் காட்சிகள் என்று கூறி பரவி வரும் AI வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மேக வெடிப்புக் காட்சிகள் என்று கூறி பரவும் இந்த வீடியோ AI மற்றும் VFX தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இதனை உண்மையான சம்பவம் என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

மேக வெடிப்பு

image.png

Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

இது தான் மேக வெடிப்பு என்றுக் கூறி 15 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் திடீரென மேல இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.


உண்மை என்ன? 

பரவி இந்த வீடியோ கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது kandha_odysseys_vines என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் ஆகஸ்ட் 6ஆம் தேதி, Sudden Flood என்று குறிப்பிட்டு பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. மேலும் அதில் இது AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்றும், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


இதையடுத்து அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்து பார்த்த போது, AI மூலம் உருவாக்கப்பட்ட பல்வேறு வீடியோக்கள் பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. மேலும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தின் bioவில், reel creator மற்றும் AI/VFX என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


மேலும் இந்த வீடியோ AI தான் என்பதை உறுதிச் செய்ய, பரவி வரும் வீடியோவை Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் இது 97.5% AI தொழில்நுட்பத்தால் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பது உறுதியானது. 


இதற்கு முன்பும் இதே போன்று ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.


மேலும் படிக்க : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பாரசீக பாலம் என்று பரவும் AI புகைப்படம்!


கமல்ஹாசன் இஸ்லாமியர்களைப் போல் தொப்பி அணிந்துகொண்டு பிரியாணி உண்ணுபது போன்று பரவும் புகைப்படம் போலியானது. 


முடிவு: 

எனவே, மேக வெடிப்புக் காட்சிகள் என்று கூறி பரவும் இந்த வீடியோ AI மற்றும் VFX தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இதனை உண்மையான சம்பவம் என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க