YouTurn

‘பூமியில் தோன்றிய இறக்கை முளைத்த குதிரை’ என்று பரவும் AI வீடியோ!

‘பூமியில் தோன்றிய இறக்கை முளைத்த குதிரை’ என்று பரவும் AI வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘பூமியில் தோன்றிய இறக்கை முளைத்த குதிரை’ எனப் பரவும் வீடியோ போலியானது. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவை தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

திடீரென்று பூமியில் தோன்றிய ரெக்கை முளைத்த குதிரை

Instagram Link | Archived Link

விரிவான விளக்கம்

பூமியில் திடீரென்று  இறக்கைகளைக் கொண்ட குதிரை தோன்றியுள்ளதாக கூறி காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 


உண்மை என்ன? 

உண்மையில் உலகில்  இறக்கைகளுடன் ஒரு குதிரையொன்று தோன்றியிருந்தால் அது குறித்து, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும். ஆனால் எந்தவொரு உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களிலும் இது குறித்தான செய்திகள் வெளியாகியாகவில்லை. 


இதையடுத்து அந்த வீடியோவில் உள்ள குதிரையின் இறக்கைகள் இயற்கையாக உருவானவை போல தோன்றவில்லை. இதனால் இது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தால்,  பரவி வரும் வீடியோவை Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம்.


ஆய்வின் முடிவில் பரவி வரும் வீடியோ, 99.8% இது AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியானது. 


இதற்கு முன்பும் இதே போன்று ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.


மேலும் படிக்க : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பாரசீக பாலம் என்று பரவும் AI புகைப்படம்! 


கிருஷ்ண ஜெயந்தி அன்று குரங்குகள் உணவு அருந்தியதாக பரவும் AI வீடியோ!


முடிவு : 

நம் தேடலில், ‘பூமியில் தோன்றிய இறக்கை முளைத்த குதிரை’ எனப் பரவும் வீடியோ போலியானது. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவை தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க