யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இமயமலையில் உள்ள ஒரு அதிசயப் பூச்சியைப் பாருங்கள் என்று கூறி 09 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
இறைவன் படைப்பில் தான் எத்தனை அதிசயம். இது இமயமலையில் வாழும் ஒரு அதிசய பூச்சி ஆகும்.
விரிவான விளக்கம்
இமயமலையில் உள்ள ஒரு அதிசயப் பூச்சியைப் பாருங்கள் என்று கூறி 09 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
பரவி வரும் வீடியோவில், கை விரல்களில் நின்று கொண்டிருக்கும் பூச்சி ஒன்று தாமரை வடிவில் மாறுவதை தெளிவாகக் காண முடிகிறது.
இறைவன் படைப்பில் தான் எத்தனை அதிசயம்
இது இமயமலையில் வாழும் ஒரு அதிசய பூச்சி ஆகும் 🤷♂️🤔😊 pic.twitter.com/Mj7Ck2ggY3
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது உண்மையான வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
“Oleg.pars” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் வீடியோ கடந்த மார்ச் 18, 2025 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அப்பதிவின் கடைசியில் “Midjourney” என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. இதன் மூலம் இது "Midjourney"-யைப் பயன்படித்தி உருவாக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
மேலும் “Oleg.pars” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் சுயவிவரங்களை ஆய்வு செய்ததில், பயனர் ஒரு Digital Creator என்பதையும் அறிய முடிகிறது.
மேலும் அவருடைய பக்கத்தில், இதே போன்று பூச்சிகளில் இருந்து பூக்கள் மாறுவதை போன்று பல வீடியோக்கள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டிருந்தன.
இதன் மூலம் பரவி வரும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: நகைக்கடைகளில் திருடிய தங்கத்தால் கூடு கட்டிய பறவைகள் எனப் பரவும் AI வீடியோ!
இதற்கு முன்பும் இதே போன்று பல AI வீடியோக்களை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பினர்.
மேலும் படிக்க: கடலுக்கடியில் ராமர் சேது பாலம் என்று பரவும் AI வீடியோ!
முடிவு:
நம் தேடலில், இமயமலையில் உள்ள ஒரு அதிசயப் பூச்சியைப் பாருங்கள் என்று கூறி பரவும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்பதை அறிய முடிகிறது.