யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“கடலுக்கு அடியில் உள்ள துவாரகை நகரத்தில் மிகப் பிரமாண்டமான கிருஷ்ணர் கோவில். இங்கு தான் கிருஷ்ணர் ஆட்சி செய்தார்” என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது
பரவிய செய்தி
கடலுக்கு அடியில் மிகப் பிரமாண்டமான கிருஷ்ணர் கோவில்.. கடலுக்குள் இருக்கும் துவாரகை நகரம்..
விரிவான விளக்கம்
“கடலுக்கு அடியில் உள்ள துவாரகை நகரத்தில் மிகப் பிரமாண்டமான கிருஷ்ணர் கோவில். இங்கு தான் கிருஷ்ணர் ஆட்சி செய்தார்” என்று கூறி 51 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது
பரவி வரும் வீடியோவில் கடலுக்கடியில் சென்று சிலர் அங்குள்ள கிருஷ்ணர், சிவன் போன்ற கடவுள்களின் சிலையையும், பழங்கால கட்டிடங்களையும் படம் பிடிப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
🧐👇🏾🙏ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை நகரத்தை நாம் அனைவரும் காண்போம் 😍🔥🙏🏾🚩 pic.twitter.com/AKdrleHJUv
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது உண்மையான வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
“mbaiarts” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ “கடலால் விழுங்கப்பட்ட துவாரகை நகரம்“ என்று குறிப்பிட்டு ஏப்ரல் 09 அன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் அதில் "இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
மேலும் இந்த வீடியோவை உருவாக்கிய பயனரின் சுயவிவரத்தில், “இந்து மதத்தைச் சார்ந்த கடவுள்களின் அழகை AI தொழில்நுட்பம் மூலம் இங்கு உருவாக்குகிறேன்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. மேலும் பரவி வரும் வீடியோவைப் போன்றே பல வீடியோக்கள் இதே போன்று AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு அங்கு பதிவு செய்யப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.

முடிவு:
நம் தேடலில், “கடலுக்கு அடியில் உள்ள துவாரகை நகரத்தில் மிகப் பிரமாண்டமான கிருஷ்ணர் கோவில். இங்கு தான் கிருஷ்ணர் ஆட்சி செய்தார்” என்று கூறி பரவும் வீடியோ போலியானது என்பது உறுதியாகிறது.