YouTurn

ஜப்பானின் ஷின்மோடேக் எரிமலை வெடிப்பு என்று பரவும் ஏஐ புகைப்படம்!

ஜப்பானின் ஷின்மோடேக் எரிமலை வெடிப்பு என்று பரவும் ஏஐ புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஜப்பானின் கிரிஷிமா மலையில் உள்ள ஷின்மோடேக் எரிமலை, சமீபத்தில் வெடித்து சிதறியது உண்மையே. ஆனால் பரவி வரும் மூன்று புகைப்படங்களில், முதல் இரண்டு புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை.

பரவிய செய்தி

ஜப்பான் நாட்டில் ஷின்மோடேக் எனும் எரிமலை வெடித்திருக்கிறது. எரிமலை வெடித்ததில் 3000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. வரும் போட்டோக்கள், வீடியோக்கள் பார்க்கவே பயமாக இருக்கிறது..

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

ஜப்பான் நாட்டில் ஷின்மோடேக் எரிமலை வெடித்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.


உண்மை என்ன?

நாம் முதலில் ஜப்பானில் உள்ள ஷின்மோடேக் எரிமலை வெடித்ததா என்பது குறித்து தேடி பார்த்தோம். அப்போது ஜூலை 2ஆம் தேதி, ஜப்பனின் கிரிஷிமா மலையில் உள்ள ஷின்மோடேக் எரிமலை வெடித்து சிதறியுள்ளதாகவும், எரிமலைப் புகை வானத்தில் 5,000 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்ததாகவும் ஜப்பானியர்களின் சமூகவலைதளப்பக்கங்களில் வெளியான புகைப்படங்கள் மூலம் காணமுடிந்தது. 


மேலும் இதை உறுதி செய்ய இது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என்பது குறித்து தேடி பார்த்தோம். அப்போது "Volcano erupts in Japan as manga artist Ryo Tatsuki’s ‘Mega Disaster’ prophecy stokes fears and echoes Baba Vanga" என்ற தலைப்பில் ஜூலை 5ஆம் தேதி, Economic Times ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் டோகாரா தீவுகளுக்கு அருகே 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஷின்மோடேக் எரிமலை வெடித்து சாம்பலைக் கக்கியது. அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


எனவே ஜப்பானின் கிரிஷிமா மலையில் உள்ள ஷின்மோடேக் எரிமலை, சமீபத்தில் வெடித்து சிதறியது உண்மையே. ஆனால் ஊடகங்களில் வெளியான செய்தி, சமூக ஊடகங்களில பகிரப்பட்ட புகைப்படங்களுடன் ஒத்துப்போகவில்லலை. இதையடுத்து அந்த புகைப்படங்கள் குறித்து ஆய்வு செய்தோம். 


பரவி வரும் புகைப்படங்கள் ஏஐ வைத்து உருவாக்கப்பட்டுள்ளது போல் இருந்ததால், Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் முதல் இரண்டு புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்பதை உறுதி செய்ய முடிந்தது. 


இதையடுத்து மூன்றாவது படம் குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது Mirror ஊடகத்தில் மார்ச் 10, 2018 அன்று "Huge volcano that featured in James Bond film fires rocks 2.5 MILES into sky after massive eruption" என்ற தலைப்பில் பரவி வரும் புகைப்படத்துடன் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. இதன் மூலம், மூன்றாவது புகைப்படம் கடந்த 2018-ல் ஷின்மோடெக் எரிமலை வெடித்தப்போது எடுக்கப்பட்டது உறுதியானது. 

image.png


முடிவு: 

நம் தேடலில், தவறான புகைப்படங்களை சமீபத்தில் நடந்த ஷின்மோடேக் எரிமலை வெடிப்பு சம்பவத்தோடு தொடர்புபடுத்தி பரப்பி வருவது தெரியவந்தது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க