யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நடிகர் கல்ஹாசனும் அவருடைய மகள் ஸ்ருதி ஹாசனும் இருப்பது போன்று பரவி வரும் புகைப்படத்தில், முதல் புகைப்படம் உண்மையானது. இரண்டாவது புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு புகைப்படத்தையும் இணைத்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நடிகர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் தனது மகளுடன் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்து அறிய, இந்த புகைப்படங்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது pinkvilla south ஊடகப்பக்கத்தில், மகளின் பெருமையும், தந்தையின் அன்பும் என்று குறிப்பிட்டு, செப்டம்பர் 8ஆம் தேதி பரவி வரும் புகைப்படங்களில் இருக்கும் முதல் புகைப்படத்தை பார்க்கமுடிந்தது.
இதையடுத்து இரண்டாவது புகைப்படம், AI மூலம் உருவாக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரவி வரும் புகைப்படங்களை 'Was It AI' இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் முதல் புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதில்லை என்றும், இரண்டாவது புகைப்படம் AI மூலம் உருவாக்கப்பட்டது தான் என்பதும் உறுதியானது.

இதற்கு முன்பும் இதே போன்று ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.
மாட்டிறைச்சி கடையில் இருந்த பசுமாட்டை வேதனையுடன் பார்த்த மற்றொரு பசுமாடு என்று பரவும் ஏஐ வீடியோ!
நியூயார்க் மெட்ரோ ரயிலில் நடந்த சம்பவம் என்று பரவும் AI வீடியோ!
முடிவு:
நம் தேடலில், நடிகர் கல்ஹாசனும் அவருடைய மகள் ஸ்ருதி ஹாசனும் இருப்பது போன்று பரவி வரும் புகைப்படத்தில், முதல் புகைப்படம் உண்மையானது. இரண்டாவது புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு புகைப்படத்தையும் இணைத்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.
